மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் சிபிஎம் வேட்பாளர் பி.சுகந்தியிடம் நம்பிக்கையுடன் பிரச்சனைகளைச் சொல்லும் பொதுமக்கள்
22 Sept 2026, 9:13 pm

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் சிபிஎம் வேட்பாளர் பி.சுகந்தியிடம் நம்பிக்கையுடன் பிரச்சனைகளைச் சொல்லும் பொதுமக்கள்

மதுராந்தகம், செப்.22-மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இடதுசாரிக்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.சுகந்தி,அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறுபகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கொத்தாளம் ஜானகிராமன் தெருவில் உள்ள நரிக்குறவர் இன மக்களைச்சந்தித்துவிட்டு, காலை 8 மணியளவில் வலையபுத்தூரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், துறையூர், சித்திரைகூடம், விநாயகநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து வெள்ளபுத்தூர் பகுதியில் உள்ள இருளர் காலனிக்குச் சென்றுஅப்பகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கரிக்கிலி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளி அருகே பொதுமக்களைச் சந்தித்த வேட்பாளர் பி.சுகந்தி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) தொடர்பாக சட்டப்பேரவையில் தங்களது குரல் ஒலிக்கும் என உறுதியளித்தார். மேலும், அத்திட்டம் தொடர்பான மக்களின் தேவைகள் மற்றும்பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

உற்சாக வரவேற்பு

சித்தாத்தூர் கிளை சார்பில் சமுதாயக் கூடம் முன்பு வேட்பாளர் பி.சுகந்திக்கு ஆரத்தி எடுத்து உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து சித்தாமூர், வெள்ளப்புத்தூர், பாப்பநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது தொகுதியின் வளர்ச்சி, குடிநீர், சாலை வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள்மற்றும் பொதுமக்களின் பல்வேறுபிரச்சனைகள் குறித்து கலந்துரையாடினார்.

தீட்டாளம் பகுதியில் மூத்த குடிமக்கள் தாங்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை சுகந்தியிடம், தெரிவித்தனர். குறிப்பாக, வயது முதிர்வால் கைரேகை அழிந்துவிட்டதால் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிவதற்குதடை ஏற்படுவதாகவும், கரு விழி பதிவு செய்யும் நடைமுறை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

தேர்தல் பணிமனை திறப்பு

எல். எண்டத்தூர் பகுதியில் கட்சிக்கொடியை ஏற்றி வைத்த பி.சுகந்தி, தொடர்ந்து தேர்தல் பணிமனை அலுவலகத்தையும் திறந்து வைத்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மாலை நேரத்தில் பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் பி.சுகந்தி வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எல்.எண்டத்தூர் பகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கிய அவர், வைப்பணை மற்றும் கூடப்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழையில் நனைந்தபடியே பொதுமக்களைச் சந்தித்து, தொகுதி தேவைகளை கேட்டறிந்து குறித்து எடுத்துரைத்து, தேர்தலில் தமக்கு ஆதரவு அளிக்குமாறுகேட்டுக்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பொதுமக்களுடன் நேரடியாக உரையாடிய பி.சுகந்தி, தொகுதியின் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரப்பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் கே.நேரு, அச்சிறுப்பாக்கம் ஒன்றியச் செயலாளர் எம்.எஸ்.அர்ஜுன் குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.திருமலை, க.ஜெயந்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், தனசேகரன், ஞானசேகரன், சாந்தி, பாரதி நகர்கட்சியின் முன்னணித் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.