மதுராந்தகம் இடைத்தேர்தல்: 27 இடங்களில் மகளிர் மட்டும் வாக்களிக்கும் மையங்கள் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி
7 Oct 2026, 2:11 am

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 27 இடங்களில் மகளிர் மட்டும் வாக்களிக்கும் மையங்கள் சிபிஎம் வேட்பாளர் பா.சுகந்தி ஆய்வுமதுராந்தகம், அக். 6-செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் செவ்வாய்க்கிழமை (அக். 6) விறுவிறுப்பாகவும் அமைதியான முறையிலும் நடைபெற்றது. 27 இடங்களில் பெண்கள்மட்டும் வாக்களிக்கும்(பிங்க்) வாக்குமையங்கள் அமைக்கப்பட்டிருந்தது சிறப்பு அம்சமாகும்.

தொகுதி முழுவதும் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் மொத்தம்285 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், பெண் வாக்காளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் கள்ளபிரான்புரம் உள்ளிட்ட 27 இடங்களில் 'மகளிர் மட்டும்' வாக்களிப்பதற்கான பிரத்யேக இளஞ்சிவப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டன. இங்குப் பெண்கள் மட்டுமேவாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், வண்ணபலூன்கள் கட்டி இந்த வாக்குச்சாவடிகள் அழகுபடுத்தப்பட்டிருந்தன.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில் தொடக்கம் முதலேபொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 5மணி நிலவரப்படி 83.86விழுக்காடு வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இறுதி நிலவரப்படி மொத்தம் 85.90 சதவீதவாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் துறை அறிவித்தது.

வாக்குப்பதிவு நடைபெற்ற நாளன்று, பல்வேறுவாக்குச்சாவடி மையங்களுக்கு இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் சிபிஎம் வேட்பாளராகப் போட்டியிடும் பா. சுகந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.