மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: களை கட்டிய தேர்தல் பிரச்சாரம்
2 Oct 2026, 2:23 am

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: களை கட்டிய தேர்தல் பிரச்சாரம்

மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சுகந்தியை ஆதரித்து கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் மதுராந்தகம் நகரில் கடை கடையாக சென்று சிறு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

சிபிஎம் வேட்பாளர் சுதந்தியை ஆதரித்து இளைஞர்களும் மாணவர்களும் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுராந்தகம் ஒன்றியம், பூதூர் ஊராட்சி இருளர் காலனி பழங்குடியின மக்கள் வேட்பாளர் சுகந்திக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டெல்லி பாபு மற்றும் வாச்சாத்தி வன்கொடுமை வழக்கை வெற்றிகரமாக எதிர்கொண்ட செல்வி ஆகியோர் பங்கேற்றனர்.

தொழுப்பேடு மற்றும் ஆத்தூர் ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளிடம் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

மதுராந்தகம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவு திரட்டப்பட்டது.

அச்சரப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் பகுதியில் வளைய புத்தூர் கூட் ரோட்டில் இருந்து வளைய புத்தூர் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

ஜமின் எண்டத்தூரில் மருவலம் ஜகந்நாதன் தலைமையில் திரளான தோழர்கள் ஆதரவு திரட்டினர்.