தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுராந்தகம் இடைத்தேர்தல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவாக சச்சிதானந்தம் எம்பி பிரச்சாரம்

3 Oct 2026, 1:15 am
மதுராந்தகம் இடைத்தேர்தல்  மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவாக சச்சிதானந்தம் எம்பி பிரச்சாரம்

மதுராந்தகம் இடைத்தேர்தல் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சுகந்திக்கு ஆதரவாக சச்சிதானந்தம் எம்பி பிரச்சாரம்

மதுராந்தகம்,அக்.2–மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.சுகந்தியை ஆதரித்து ராமாபுரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:எதிர்வரும் தேர்த லில் பொதுமக்கள் அனைவரும் அரிவாள் - சுத்தி

யல் - நட்சத்திரம் சின்ன த்திற்கு வாக்களித்து வேட்பாளர் பி.சுகந்தியை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கு தேர்வு செய்யப்பட்டாலும், அந்தந்தப் பகுதி மக்களின் பிரச்சனைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி உற்பத்தி நிலையத்தை உட னடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை நான் எடுத்துள்ளேன். இந்தத் தொகுதிக்கும் எனக்கும் நேரடிச் சம்பந்தம் இல்லா விட்டாலும், தமிழ்நாட்டில் ஒரு தடுப்பூசி உற்பத்தி ஆலை செயல்பட்டால் அது நம் மாநில மக்க ளுக்கு மிகப்பெரிய வரப் பிரசாதமாக அமையும். இந்தத் தடுப்பூசி நிலை யம் இத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான மரகதம் குமரவேல் காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. ஆனால், இதுவரை அவர்

இது குறித்து நாடாளு மன்றத்தில் குரல் எழுப்பி னாரா? அதற்குப் பிறகு வந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் கூட இந்த தடுப்பூசி தயாரிப்புநிலையம் குறித்து எ இடத்தி லும் பேசியது கிடையாது. இந்தத் தொழிற்சாலை செயல்பாட்டுக்கு வந்தால் இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும், தமிழ்நாட்டு மக்களுக்கு இலவச தடுப்பூசிகளையும் வழங்க முடியும்; ஆனால் அதற்கான வாய்ப்பை அவர்கள் செய்ய மறுக் கிறார்கள்.

மேலும், மதுராந்த கத்தைச் சுற்றியுள்ள பகுதி யிலிருந்து ஏராளமானோர் சென்னையை நோக்கி வேலைக்குச் சென்று வருகின்றனர். பீக் ஹவர்ஸ் நேரங்களில் செங்கல் பட்டிலிருந்து ரயிலில் பயணம் செய்ய முடியாத அளவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் சூழல் உள்ளது. போதுமான ரயில் வசதி இல்லாததால் பயணிகள் பாதுகாப்பற்ற முறையில் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை நிலவுகிறது. இதைப் பற்றி கடந்த கால நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எதையாவது பேசினார்களா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினராகவும் நானே இருப்பேன் என்று கூறிவிட்டு எளிய மக்களின் அடிப்படைப் பிரச்ச னைகளைத் தீர்க்காமல் இருப்பதை மக்கள் உணர வேண்டும்.இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாநில குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் சிங்காரவேலன், செங்கல்பட்டு மாவட்ட குழு உறுப்பினர் மு.தமிழ்பாரதி உள்ளிட்ட சிபிஎம் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும்திரளாக கலந்து கொண்ட னர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.