பயன்பாட்டுக்கு வந்த மதுராந்தகம் பேருந்து நிலையம்
1 Apr 2026, 4:02 pm
<p><strong>பயன்பாட்டுக்கு வந்த மதுராந்தகம் பேருந்து நிலையம் </strong></p>
<p>சென்னை, ஏப். 1- மதுராந்தகம் நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் புதனன்று (ஏப்.1) திடீரென பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த மார்ச் 4-ஆம் தேதி தமிழக முதலமைச்சரால் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைக்கப்பட்ட போதிலும், மின்சாரம் மற்றும் குடிநீர் போன்ற இறுதிக்கட்ட பணிகள் காரணமாக இதுநாள் வரை பொது மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருந்தது. இந்நிலையில், புதனன்று காலை எவ்வித முன் அறி விப்பும் இன்றி பேருந்துகள் புதிய நிலையத்திற்குள் இயக்கப்பட்டன. இதனால் விவரம் தெரியாத பயணிகள், பழைய தற்காலிக பேருந்து நிலையத்திற்கும் புதிய நிலையத்திற்கும் இடையே அலைக்கழிக்கப்பட்டு கடும் அவதிக்குள்ளாகினர். 51 கடைகள் மற்றும் 50 பேருந்துகள் நிறுத்தும் வசதி கொண்ட இந்த வளாகத்தில், கூடுதல் நிதியாக ரூ.99 லட்சம் செலவில் உணவகம் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. முறையான அறிவிப்பு இல்லாததால் முதல் நாளில் பயணிகள் மிகுந்த இன்னல்களைச் சந்தித்தனர்.</p>
