அதிக வட்டி கொடுமையால் பெண் உயிரிழப்பு குற்றவாளிகள் கைது கோரி சாலை மறியல்
21 Jul 2026, 9:43 pm
<p><strong>அதிக வட்டி கொடுமையால் பெண் உயிரிழப்பு குற்றவாளிகள் கைது கோரி சாலை மறியல்</strong></p><p>மதுரை, ஜூலை 21- அதிக வட்டி கேட்டு தொடர்ந்து மிரட்டப் பட்டதால் மன உளை ச்சலுக்கு ஆளான பெண் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவத் தில், தொடர்புடைய அனைத்து குற்றவாளி களையும் கைது செய்ய வலியுறுத்தி அவ ரது குடும்பத்தினரும் உறவினர்களும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை முன்பு உடலை வாங்க மறுத்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை செல்லூர் கீழத்தோப்பைச் சேர்ந்த ராஜாராம் (54), மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் கூலித் தொழிலாளி யாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பிரேமா (49). இவர்களுக்கு இரண்டு மகள் களும் ஒரு மகனும் உள்ளனர். குடும்பத்தின் மூத்த மகளின் திருமணச் செலவுக்காக 2021-ஆம் ஆண்டு பிரேமா, திருப்பதி மற்றும் செல்வகலையரசி ஆகி யோரிடம் ரூ.2 லட்சம் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கான வட்டியாக மாதந்தோறும் ரூ.8 ஆயிரம் செலுத்தி வந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக வட்டி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக தெரி கிறது. இதையடுத்து, கடந்த 13 ஆம் தேதி திருப்பதி, செல்வகலையரசி, பகவதி, அங் கம்மாள் உள்ளிட்டோர் பிரேமாவின் வீட் டுக்குச் சென்று பணம் கேட்டு கடுமையாக மிரட்டியதுடன், மதுரை நெல்பேட்டை பகு தியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து கொண்டிருந்த பிரேமாவை பலர் முன்னி லையிலேயே அவமானப்படுத்தி பேசிய தாக கூறப்படுகிறது. இந்த அவமானத்தையும் மன அழுத்தத் தையும் தாங்க முடியாமல் பிரேமா, அப்பகு தியில் உள்ள கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பலனின்றி செவ்வா யன்று அதிகாலை உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த பிரேமாவின் குடும்பத்தினரும் உறவினர்களும் மருத்து வமனைக்கு திரண்டு வந்து, இந்த தற் கொலைக்கு காரணமான அனைவரையும் கைது செய்யும் வரை உடலை பெற்றுச் செல்ல மாட்டோம் என்று அறிவித்தனர். பின் னர் மருத்துவமனை பிணவறை அருகி லுள்ள பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி னர். வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஏற்க னவே செல்வகலையரசி கைது செய்யப் பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற அனைவரையும் உட னடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் போலீசார் உறுதி யளித்தனர். இதையடுத்து குடும்பத்தினரும் உற வினர்களும் போராட்டத்தை கைவிட்டு பிரேமாவின் உடலை பெற்றுச் சென்றனர்.</p>
