தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாலியல் வன்கொடுமை, மிரட்டல் குற்றச்சாட்டு பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் இளம்பெண் மனு

15 Jun 2026, 10:58 pm
பாலியல் வன்கொடுமை, மிரட்டல் குற்றச்சாட்டு பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் இளம்பெண் மனு
<p><strong>பாலியல் வன்கொடுமை, மிரட்டல் குற்றச்சாட்டு பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் இளம்பெண் மனு</strong></p><p>மதுரை, ஜூன் 15- மதுரை மாநகரைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதுடன், ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக் களை பயன்படுத்தி தொடர்ந்து மிரட்டி வரு வதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியரி டம் மனு அளித்துள்ளார். சபர்நிஷா என்ற இளம்பெண் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: கடந்த 2023-ஆம் ஆண்டு காளவாசல் பகுதியில் உள்ள பி.எம். டவர்ஸ் என்ற தங்கும் விடுதியில் வரவேற்பாளராக பணி யில் சேர்ந்ததாகவும், அதன் உரிமையாளர் லிங்கதுரை (45) திருமணம் செய்து கொள் வதாக கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக வும் தெரிவித்தார். 2024-ஆம் ஆண்டு ஒருநாள் வசூல் பணத்தை வீட்டிற்கு கொண்டு வருமாறு கூறியதையடுத்து, அவரது வீட்டிற்கு சென்ற போது கொடுக்கப்பட்ட தண்ணீரை குடித்த பிறகு மயக்கமடைந்ததாகவும், அந்த நிலை யில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக் கள் எடுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினார். அதன்பின்னர், அந்த பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதுடன், அடியாட்கள் மூலம் அச்சுறுத்தல் விடுத்ததாகவும் அவர் தெரி வித்தார். மேலும், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி மதுரை பைபாஸ் சாலையில் சென்றபோது, தன்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று நான்கு நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தியதாகவும் கூறினார். இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த மே 16-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தாலும், குற்றம் சாட்டப் பட்டவர்கள்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். தனக்கும் தனது உறவினர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாது காப்பு வழங்க வேண்டும் என்றும், தன்னை தொடர்புடைய வீடியோ பதிவுகளை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சில காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், வழக்கை திரும்பப் பெறுமாறு அழுத்தம் கொடுக்கப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த மனு திங்கள்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.