மழைநீர் தேக்கம்; வற்றாத குப்பையால் சுகாதாரச் சீர்கேடு மதுரை 58வது வார்டில் பொதுமக்கள் அவதி
10 May 2026, 11:25 pm

மழைநீர் தேக்கம்; வற்றாத குப்பையால் சுகாதாரச் சீர்கேடு மதுரை 58வது வார்டில் பொதுமக்கள் அவதி

மதுரை, மே 10- மதுரை மாநகராட்சி 58வது வார்டு ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள ஹோலி ஃபேமிலி பள்ளி அருகில் வற்றாத குப்பை யால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக, மழை பெய்தால் சொல்ல முடியாத அளவிற்கு சுகாதாரச் சீர்கேட்டில் சிக்கி தவிக்கிறது.

மேலும், குப்பை தொட்டிகள் சாலை யின் நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் வாக னங்கள் செல்ல கூட முடியாத சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கூறுகையில், “மழை பெய்தால் அதிகமாக நீர் தேங்கி நிற்பதா லும், கால்வாய்களில் உள்ள கழிவுநீர் வெளி யேறாமல் இங்கு தேங்குவதாலும், உள்ளே சென்று குப்பைகளை அகற்ற முடிவதில்லை.

இதுகுறித்து உதவி பொறியாளரிடம் ஏற்க னவே தெரிவித்துள்ளோம். எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை” என தெரி வித்தனர்.

இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கை யில், “குப்பை தொட்டிகளை இவ்விடத்தில் வைக்க வேண்டாம் என்று பலமுறை கூறி யும், மாநகராட்சி நிர்வாகமும் தனியார் குப்பை சேகரிப்பு நிறுவனமும் அதனை புறக்கணித்து வருகின்றன.

இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் இந்த நிலை படுமோசமாக உள்ளது.

கால் வாய்கள் சரியாக பராமரிக்கப்படாததால் மழைநீர் வெளியேறாமல் சாலையிலேயே தேங்கி நிற்கிறது” என குற்றம் சாட்டினர்.

மேலும், குப்பைகளை கொட்ட வரும் பொதுமக்கள் தண்ணீரை கடந்து செல்ல முடியாத காரணத்தால், நேரடியாக மழை நீரிலேயே குப்பைகளை கொட்டி செல் கின்றனர்.

இதனால் கொசுக்கள் அதிக ரித்து, நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரி வித்தனர்.

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாண வர்கள் பள்ளிக்குச் சென்று தங்களுடைய தேர்ச்சி படிவங்களை பெறுவதற்கு செல்ல இந்த கழிவுநீரை கடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், 56வது வார்டில் உள்ள புதுஜெயில் ரோட்டில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய சாலை அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது குடிநீர் குழாய் அமைக்கும் பணி களுக்காக பல இடங்களில் சாலை தோண்டப்பட்டதால், புதிய சாலை சேதம டைந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவு கிறது.

குறிப்பாக ஜெயில் குடியிருப்பு அரு கில், முரட்டன்பத்ரி, காமாட்சி அம்மன் கோயில் அருகில் மற்றும் மில் காலனி (வெள்ளையம்மன் கோயில் எதிரில்) போன்ற பகுதிகளில் சாலை மோசமான நிலையில் உள்ளது.

மேலும், 56வது வார்டு இளம் தோப்பு 3வது தெருவில் மழை நீர் தேங்கி நிற்பதால், குறிப்பாக தெருவின் மேற்குப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி கொசுக்கள் மற்றும் விஷ பூச்சி கள் அதிகமாக காணப்படும் இடமாக மாறி யுள்ளதால், மக்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் நிலவுகிறது.

இந்த அனைத்து பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு, மழை நீரை உடனடியாக வெளியேற்றவும், குப்பைகளை அகற்றவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும், கால்வாய்களை முறையாக பராமரிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக ஆய்வு செய்து துரித தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.