தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“15 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணம் வீணாகிறது” வெள்ளக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆய்வுக்கு பின் பொறுப்பு மேயர் நாகராஜன் பேட்டி

23 May 2026, 10:27 pm
“15 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணம் வீணாகிறது” வெள்ளக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆய்வுக்கு பின் பொறுப்பு மேயர் நாகராஜன் பேட்டி

“15 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணம் வீணாகிறது” வெள்ளக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆய்வுக்கு பின் பொறுப்பு மேயர் நாகராஜன் பேட்டி

மதுரை, மே 23- மதுரை மாநகராட்சியின் வெள்ளக்கல் குப்பை சேக ரிப்பு மையம் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், மாநகராட்சியின் பொறுப்பு மேயர் தி.நாக ராஜன் வெள்ளியன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கீரைத் தோட்டங்களுக்கு கழிவுநீர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநக ராட்சியின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 125 எம்.எல்.டி திறன் கொண்ட பம்பிங் ஸ்டேஷன் மற்றும் சுத்தி கரிப்பு நிலையமாக உள்ளது. ஆனால் தற்போது வெறும் 25 எம்.எல்.டி கழிவுநீர் மட்டுமே இங்கு வந்து கொண்டிருக்கிறது. மீதமுள்ள கழிவுநீர் வேறு வழி களில் திருப்பி விடப்படுகிறது.

நான் வந்த பாதை யிலேயே சாக்கடை நீரை தடுத்து வைத்து நேரடியாக கீரைத் தோட்டங்களுக்கு அனுப்புவது கண்டறி யப்பட்டது.

இது பொதுமக்களின் உடல்நலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்” என்றார். மேலும், “மக்கள் உணவாக பயன்படுத்தும் கீரை வகைகள் சாக்கடை நீரை பயன்படுத்தி பயிரிடப்படு வது மிகவும் ஆபத்தானது. இதன் மூலம் தொற்று நோய்கள் பரவும் அபாயம் அதிகரிக்கிறது. சுத்தி கரிப்பு நிலையம் இருந்தும், சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் அதே சாக்கடை ஓடையிலேயே விடுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த நீரை அருகிலுள்ள கண்மாய்களில் சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அது பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டமாக இருக்கும்” என்று தெரிவித்தார். அதேபோல், “இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்காக மாதந்தோறும் சுமார் ரூ.15 லட்சம் வரை மின்சார கட்ட ணம் செலவிடப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக மக்களின் வரிப்பணம் முறையாக பயன்படுத்தப்படா மல் வீணாகி வருகிறது” என்றும் அவர் குற்றம்சாட்டி னார்.

தொடர்ந்து வெள்ளக்கல் குப்பை சேகரிப்பு மையத்தில் நடைபெறும் பணிகள் குறித்தும் அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். “இங்கு குப்பை சேகரிப்பு மற்றும் தரம் பிரிக்கும் பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

அவர்கள் பிரிக்கும் குப்பைகளை மாநகராட்சியிடம் ஒப்ப டைப்பதே அவர்களுடைய ஒப்பந்தப் பணி. ஆனால் அவற்றை தனியாக விற்பனை செய்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும், குப்பை தரம் பிரிக்கும் பணிக்காக மாநகராட்சியிடமிருந்து ரூ.36 ஆயிரம் கோடி வரை தொகை பெற்றுள்ளதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதற்கேற்ற வகையில் பணிகள் முறையாக நடைபெறவில்லை” என்றார்.

மேலும், “பாம்பன் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதி களைச் சேர்ந்த மக்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அவர்களுக்காக தனியாக பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புகளை ஒட்டிய பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் மழைக் காலங்களில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த மையத்தில் குடியிருப்பு களுக்கு அருகில் குப்பைகளை கொட்டாமல், பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் தள்ளி வைத்து தரம் பிரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

அதேபோல், “இங்கு பல்வேறு வடமாநில தொழி லாளர்கள் மற்றும் சிறுவர்களும் பணியில் ஈடு படுத்தப்படுவதாக தகவல்கள் வருகின்றன. குப்பை களில் இருந்து கிடைக்கும் பொருட்களை அடிப்படை யாகக் கொண்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படு வதாகவும் கூறப்படுகிறது.

இது போன்ற முறைகேடு கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை பயன்படுத்தி கீரை பயிரிடப்படுகின்றது. ஆனால் அந்த நீரை பயன்படுத்து பவர்கள் மாநகராட்சிக்கு எந்த கட்டணமும் செலுத்த வில்லை.

அந்த கழிவுநீர் மீண்டும் சாக்கடை நீராகவே திரும்பி வருகிறது. எனவே இந்த மையத்தை முறையாக பராமரித்து, அதில் கிடைக்கும் வருவாய் மாநகராட்சிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் பொறுப்பு மேயர் நாக ராஜன் வலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.