சென்னையின் கூவம் போல மாறுமா மதுரையின் வைகை? வரலாறும் பண்பாடும் காக்கப்படுமா என்ற அச்சத்தில் மக்கள்
6 Jun 2026, 10:56 pm

சென்னையின் கூவம் போல மாறுமா மதுரையின் வைகை? வரலாறும் பண்பாடும் காக்கப்படுமா என்ற அச்சத்தில் மக்கள்

சென்னையின் கூவம் போல மாறுமா மதுரையின் வைகை? வரலாறும் பண்பாடும் காக்கப்படுமா என்ற அச்சத்தில் மக்கள்விளங்குகின்றன. சென்னைக்கு கூவம் ஆறு எவ்வளவு முக்கியமோ, அதேபோல் மதுரைக்கு வைகை ஆறும் வெறும் நீராதாரமாக மட்டுமல்லாமல், நகரின் வரலாறு, இலக்கியம், ஆன்மீகம், கலாச்சாரத்து டன் பின்னிப்பிணைந்த உயிர்நாடி யாக திகழ்கிறது. சங்க இலக்கியங்களில் போற்றப் பட்ட வைகை ஆறு, பாண்டிய மன்னர்க ளின் தலைநகரான மதுரையின் வளர்ச்சிக்கும் செழிப்புக்கும் முக்கிய காரணியாக இருந்தது. “தூங்கா நகரம்” என அழைக்கப்படும் மதுரை யின் பெருமைகளில் வைகை ஆற்றுக் கும் தனி இடம் உண்டு. சித்திரைத் திரு விழாவின் முக்கிய நிகழ்வான கள்ள ழகர் வைகையில் இறங்கும் வைபவம் உலகப் புகழ்பெற்ற ஆன்மீக மற்றும் பண்பாட்டு நிகழ்வாக விளங்குகிறது. மேலும், மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்களின் வளர்ச்சியிலும், பழங்கால வர்த்தகப் பாதைகளின் செழிப்பிலும் வைகை ஆறு முக்கிய பங்காற்றியுள்ளது. ஆனால் இன்று, சென்னையின் கூவம் ஆறு சந்தித்த நிலையைப் போன்ற சூழல் வைகை ஆற்றுக்கும் உருவாகி வருவதாக சமூக ஆர்வலர் கள் கவலை தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் சென்னையின் அடையாள மாக விளங்கிய கூவம், திட்டமிடப் படாத நகர வளர்ச்சி, சாக்கடை நீர் கலப்பு மற்றும் பராமரிப்பின்மை கார ணமாக கடுமையாக மாசடைந்தது. அதன் மீட்புக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பின்னர் செயல்படுத்தப்பட்டன. ஆகாயத் தாமரை, கழிவுநீரால் சீரழியும் வைகை தற்போது வைகை ஆற்றிலும் இதேபோன்ற அபாய அறிகுறிகள் தென்படுவதாக கூறப்படுகிறது. கோச்சடை முதல் ஆழ்வார்புரம் வரை ஆகாயத்தாமரை செடிகள் பரவ லாகப் படர்ந்துள்ளதுடன், பல்வேறு பகுதிகளில் இருந்து சுத்திகரிக்கப் படாத கழிவுநீர் ஆற்றில் கலப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீரின் தரமும் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பேச்சியம்மன் படித் துறை, ஆரப்பாளையம், செல்லூர், தத்தனேரி, யானைக்கல் மற்றும் ஆழ் வார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதைத் தடுக்க, மதுரை மாநக ராட்சியும் பொதுப் பணித்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மக்களின் அடையாளம் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,“கூவம் ஆறு எந்த நிலையில் சீரழிந்தது என்பதை நாடே பார்த்துள்ளது. அதே தவறை வைகை ஆற்றில் நிகழ அனுமதிக்கக் கூடாது. வைகை என்பது வெறும் ஆறு அல்ல; அது மதுரையின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் மக்களின் வாழ்வா தாரத்தின் அடையாளம். கூவத்தை மீட்க பல ஆண்டுகள் போராட வேண் டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலை வைகைக்கு வருவதற்கு முன்பே அரசு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்” என்றனர். உடனடி நடவடிக்கை தேவை வைகை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றுதல், சாக்கடை மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதை முழுமையாகத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை யங்களை முழுத் திறனுடன் இயக்கு தல், ஆற்றங்கரைகளில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகை யில் கடுமையான கண்காணிப்பு மேற் கொள்ளுதல் உள்ளிட்ட நடவடிக்கை களை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை மதுரையின் வரலாறு, பண்பாடு மற்றும் எதிர்கால தலைமுறைகளின் நலனைப் பாதுகாக்க வைகை ஆற்றை காப்பது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. இல்லையெனில், சங்க இலக்கியங்களில் போற்றப்பட்ட வைகையும் ஒருகாலத்தில் சென்னை யின் பெருமையாக விளங்கிய கூவம் போன்று மாசுபாட்டின் அடையாளமாக மாறும் அபாயம் இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெ.பொன்மாறன்