தத்தனேரி – காளவாசல் பகுதிகளில் சாலை, கழிவுநீர் பிரச்சனையால் அவதி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
21 May 2026, 10:52 pm

தத்தனேரி – காளவாசல் பகுதிகளில் சாலை, கழிவுநீர் பிரச்சனையால் அவதி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை, மே 21- மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட தத்த னேரி, காளவாசல் உள்ளிட்ட பகுதிகளில் சாலை சேதம் மற்றும் பாதாளச் சாக்கடை கழிவுநீர் வெளியேற்றம் காரணமாக பொது மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிய டைந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் உடனடி மற்றும் நிரந்தர நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் வலுத்துள்ளது. ம

துரை காளவாசல் பகுதியில் இருந்து தேனி செல்லும் மெயின் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நீண்டநாட்க ளாக பாதாளச் சாக்கடை கழிவுநீர் வெளி யேறி சாலையை ஆக்கிரமித்து வருகிறது.

இதனால் வாகனங்கள் செல்ல பெரும் சிர மம் ஏற்படுவதோடு, சில நேரங்களில் போக்குவரத்து நெரிசலும் உருவாகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், “பலர் இதை மழைநீர் தேக்கம் என்று நினைக்கிறார்கள். ஆனால் இது தினசரி

வெளியேறும் பாதாளச் சாக்கடை கழிவுநீர்.

மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும், தற்காலிகமாக மட்டும் சரிசெய்து விட்டு செல்கின்றனர்.

நிரந்தர தீர்வு காணப்படவில்லை” என வேதனை தெரிவித்தனர். அதேபோல் தத்தனேரி மெயின் ரோடு, அருள்தாஸ்புரம் அருகே உள்ள சாலை மிக வும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

இந்த மோசமான சாலை காரணமாக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் கூட சிரமத்து டன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளதாக கூறப்படுகிறது.

மேலும், சாலை விரிவாக்கப் பணிக்காக கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் சாலையோ ரங்களில் அப்படியே கிடப்பதால், மழைக் காலங்களில் வாகனங்கள் செல்லும்போது கற்கள் பட்டு பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் காயமடையும் அபாயமும் நிலவுகிறது.

இதனுடன், ஆரப்பாளையம் – தத்த னேரி இணைப்பு பாலத்தின் நடுப்பகுதியில் காங்கிரீட் தளம் பெயர்ந்து கம்பிகள் வெளி யில் தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் வாகனங்கள் சிக்கி விபத்துகள் ஏற் படும் அபாயம் நிலவுகிறது.

எனவே, சாலை சேதம், கழிவுநீர் தேக்கம் மற்றும் பால சேதம் உள்ளிட்ட பிரச்ச னைகளை உடனடியாக சரிசெய்ய மாநக ராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொது மக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.