நீட் தேர்வு முறைகேட்டிற்கு கண்டனம் மதுரையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்
14 May 2026, 9:07 pm

நீட் தேர்வு முறைகேட்டிற்கு கண்டனம் மதுரையில் மாணவர்கள் முற்றுகை போராட்டம்

மதுரை, மே 14- நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வரும் முறைகேடுகளைக் கண்டித்து, மதுரை மாநகர் மாவட்ட இந்திய மாணவர் சங்கம் சார்பில் வியாழக்கிழமை தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

மீனாட்சி பஜார் அருகே உள்ள தலைமைத் தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு மாநகர் மாவட்டத் தலைவர் ஜெ. டீலன் ஜஸ்டின் தலைமை தாங்கி னார்.

மாவட்டச் செயலாளர் சி.டேவிட் ராஜதுரை, மாநிலக் குழு உறுப்பி னர் தீபலட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப் பினர்கள் மற்றும் மாணவர் சங்க கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, சேதுபதி பள்ளி அருகி லிருந்து மாணவர்கள் மற்றும் நிர்வாகி கள் ஒன்றிய அரசின் நீட் தேர்வு கொள்கைக்கு எதிராகவும், தேர்வு முறைகேட்டை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பியபடி ஊர்வல மாக வந்து தபால் நிலையம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது, மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.