மாணவர் தமிழ்ச்செல்வன் வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரணை நடத்த கோரிக்கை உடலை பெற்றுக் கொண்டும் போராட்டம் தொடரும்
22 Sept 2026, 9:23 pm

மாணவர் தமிழ்ச்செல்வன் வழக்கை கொலை வழக்காக மாற்றி சிபிசிஐடி விசாரணை நடத்த கோரிக்கை உடலை பெற்றுக் கொண்டும் போராட்டம் தொடரும்

ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி உறுதி

மதுரை, செப்.22-மதுரை ஆனையூர் பகுதியில் கடந்த செப்.6-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்த பள்ளி மாணவர் தமிழ்ச்செல்வனின் மரண வழக்கை கொலை வழக்காக மாற்றி, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, தமிழ்ச்செல்வன் நீதிக்கான ஒருங்கிணைப் புக் குழு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த 16 நாட்களாகபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவரின் உடலை, குடும்பத்தினரின் வேண்டுகோளைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டனர். பின்னர் பெற்றோர் மற்றும்போராட்டக்குழுவினர் கண்டன முழக் கங்களுடன் உடலை ஏ.வி. மேம்பாலம் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அங்கு மாணவரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.ஊர்வலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணி, இந்திய ஜனநாயகவாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டம் தொடரும்

இதுகுறித்து தமிழ்ச்செல்வன் நீதிக்கான ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி கூறியதாவது:“மதுரை மாநகர காவல்துறை மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையில் மட்டுமே மாணவரின் உடலை பெற்றுக் கொண்டோம்.மாணவரின் தாயாரின் வேண்டுகோளையும் கருத்தில் கொண்டோம். தனது மகனை ஆரத்தழுவி இறுதி அஞ்சலி செலுத்த வேண் டும் என அவர் கேட்டுக் கொண்டார். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட் டம் தொடர்ந்து நடைபெறும்.

சந்தேக மரண வழக்கை கொலை வழக் காக மாற்ற வேண்டும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கைகள். உடலை பெற்றுக் கொண்டதில் எந்தவித அழுத்தமும் இல்லை. இது எங்களது சொந்த முடிவு” என்றார்.மாணவர் தமிழ்ச்செல்வனின் இறுதிச் சடங்கு திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள பாளையம் கிராமத்தில் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.