தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரஷ்ய முகாமில் சிறைப்பட்ட மதுரை மாணவி தாயகம் திரும்பினார்! வெளிநாட்டில் பயிலும் மாணவர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை : சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

2 Nov 2026, 10:54 pm
ரஷ்ய முகாமில் சிறைப்பட்ட மதுரை மாணவி தாயகம் திரும்பினார்! வெளிநாட்டில் பயிலும் மாணவர்களைப்  பாதுகாப்பது அரசின் கடமை : சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

ரஷ்ய முகாமில் சிறைப்பட்ட மதுரை மாணவி தாயகம் திரும்பினார்! வெளிநாட்டில் பயிலும் மாணவர்களைப் பாதுகாப்பது அரசின் கடமை : சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல்

மதுரை, நவ. 2 -ரஷ்யாவில் போர்ப் பதற்றத்தால் விமானம் ரத்தாகி, விசா காலம் கடந்ததாகக் கூறி சுமார் 10 நாட்கள் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த மதுரை மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் தொடர் தலையீட்டால் மீட்கப்பட்டு, பத்திரமாக மதுரை வந்து சேர்ந்தார்.

மாணவியின் பெற்றோர் திங்களன்று சு. வெங்கடேசனை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பில் தூதரகங்களின்பொறுப்பின்மை குறித்து அவர் கடும் கேள்விகளை எழுப்பினார்.

“மாணவியின் தவறு அல்ல”

செய்தியாளர்களிடம் சு. வெங்கடேசன் கூறியதாவது: வெளிநாடுகளில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் சட்டரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இந்திய அரசு மற்றும் தூதரகங்களின் முதன்மைக் கடமை. விசா முடிவதற்கு இரண்டு நாட்கள்முன்பே இந்த மாணவி பயணச்சீட்டுபதிவு செய்திருந்தார். போர் காரணமாக டிரோன் தாக்குதல் நடந்து விமானம் ரத்தானது அவரது தவறு அல்ல. அடுத்த விமானம் வரை அவரைப் பாதுகாத்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்புஇந்தியத் தூதரகத்துக்கு உண்டு.

நம்மைத் தொடர்புகொள்வ தற்கு முன்பே எட்டு நாட்கள் கடந்து விட்டன. இத்தனை நாட்களாகத் தூதரகத்தைத்தொடர்புகொண்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக் கிறது. மாணவியின் குடும்பத்தினர் அனைத்து உதவி மையங்களையும் அணுகியும், எந்த அமைப்பிடமிருந்தும் உதவி கிடைக்க வில்லை.

பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் நிலை

மருத்துவம் பயில வெளிநாடு செல்லும் மாணவர்கள் பல்கலைக்கழகங்கள், கல்வி ஆலோசனை நிறுவனங்கள், முகவர்களை நம்பியே செல்கின்றனர். ஆனால், பிரச்சனை வரும்போது பல்கலைக் கழகமும் ஆலோசனை நிறுவனங்களும் தூதரகமும் பொறுப்பைத் தட்டிக்கழிக்கின்றன. உக்ரைன்–ரஷ்யா போர்ச் சூழலில் எப்போதுஎன்ன நடக்கும் என்று தெரியாது. எனவே, உதவி எண்களும் அவசர உதவி மையங்களும் முறையாகச் செயல்பட வேண்டும்; மாணவர்கள்தொடர்புகொள்ளும்போது உடனடிப் பதிலும் நடவடிக்கையும் கிடைக்க வேண்டும்.

“15 நாட்கள் ஏன் காத்திருக்க வேண்டும்?”

மாணவியைப் பாதுகாப்பாக மீட்பதே நமது முதல் இலக்காக இருந்தது. நவம்பர் 15-க்குப் பிறகே

அனுப்ப முடியும் என்று கூறப்பட்டபோது, எந்தத் தவறும் செய்யாத மாணவி மேலும் 15 நாட்கள் ஏன் காத்திருக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பி, உடனடியாகப் பயண ஏற்பாடு செய்ய வலியுறுத்தினோம். மாணவிவிமானத்தில் அமர்ந்த தக

வல் கிடைத்த பிறகே வெளியுறவுஅமைச்சகத்துக்கு மின்னஞ்சல் அனுப்புவேன் என்று கூறியிருந்தேன்; அதன்படியே மாணவி விமானத்தில் பாதுகாப்பாக அமர்த்தப்பட்ட பிறகு தகவல் கிடைத்தது. அவர் பத்திரமாக இந்தியா திரும்பியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.தொடக்கத்தில் தூதரகம் உரிய வகையில் செயல்படவில்லை என்பது குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் கடுமையாகப்பேசியுள்ளேன். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

தமிழகத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் கூறுகின்றனர். சர்வதேசவிவகாரங்களில் தலையிடும் அதிகாரம் ஒன்றிய அரசு, வெளியுறவுத்துறை, தூதரகங்களுக்கே உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் முடிந்த அனைத்துத் தலையீடுகளையும் மேற்கொண்டேன்.

கல்வி தொடர உதவி

மாணவியின் மருத்துவக் கல்வி பாதிக்கப்படாமல் தொடரத் தேவையான உதவிகளைச் செய்வேன். நெருக்கடியான சூழலிலும் மன உறுதியுடன் இருந்த மாணவியைப் பாராட்டுகிறேன். இந்தச் சம்பவம் தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்; வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு, கல்வி, உரிமைகளைக் காப்பது அரசின் பொறுப்பு. இனி எந்த மாணவருக்கும் இதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது. இவ்வாறு சு. வெங்கடேசன் தெரிவித்தார்.போர்ப் பதற்றத்தால் ஏற்பட்ட விமானப் போக்குவரத்துத் தடையால் ஒரு மாணவி தடுப்பு முகாமில் சிக்கித் தவித்த இந்தச் சம்பவம், வெளிநாடுகளில் உயர்கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும், இந்தியத் தூதரகங்களின் அவசரகாலச் செயல்பாடுகள் குறித்தும் முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

நடந்தது என்ன?

ரஷ்யாவின் தெற்கு உரால் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆறு ஆண்டு மருத்துவப் படிப்பில் நான்காம் ஆண்டு பயிலும் டெய்சி, மருத்துவக் காரணங்களுக்காக விடுமுறையில் இந்தியா திரும்பத் திட்டமிட்டிருந்தார். விசா அக்டோபர் 20 அன்று முடிவடைய இருந்ததால், அக்டோபர் 18 அன்றே மாஸ்கோ வழியாகப் பயணச்சீட்டு பதிவு செய்து விமான நிலையம் சென்றார். ஆனால், டிரோன் தாக்குதல்களால் ரஷ்யாவின் உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்தாகின. மாற்று விமானம் கிடைக்காத நிலையில், சட்டவிரோதமாகத் தங்கியதாகக் கூறி ரஷ்ய அதிகாரிகள் அவரைத் தடுப்பு முகாமில் அடைத்தனர். 90 நாள் வரை காவலில் வைக்கப்படும் அபாயம் எழுந்தது.தந்தை அருள் மோரேஸ் உதவி கோரியதையடுத்து, சு. வெங்கடேசனின் மதுரை, தில்லி அலுவலகங்கள் மூலம் வெளியுறவு அமைச்சர், அமைச்சக உயர் அதிகாரிகள், ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசப்பட்டது. மாணவியின் மருத்துவ நிலை, பயணச்சீட்டு ரத்துக்கான காரணம், டிரோன் தாக்குதலால் விமானச் சேவை பாதிக்கப்ட்ட விவரம் உள்ளிட்ட ஆதாரங்கள் திரட்டப்பட்டு வெளியுறவுத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டன. அக்டோபர் 27 அன்று இந்தியஅதிகாரிகள் ரஷ்ய அதி

காரிகளை நேரில் சந்தித்து, போர் காரணமாக விமானம் ரத்தானதற்கு எந்தத் தவறும் செய்யாத மாணவியைத் தண்டிப்பது நியாயமற்றது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைத்தனர். இதன் விளைவாக, நவம்பர் 15 என்ற காலக்கெடு மாற்றப்பட்டு, நவம்பர் 1 அன்றே மாணவி இந்தியா திரும்பினார்.பெற்றோர் அதிருப்தி“விசா முடியும் முன்பே பயண ஏற்பாடு செய்திருந்தும், ரூ. 55 ஆயிரம்,ரூ. 65 ஆயிரம் செலவில் பதிவு செய்த பயணச்சீட்டுகள் வீணான”தாக மாணவியின் தாய் தெரிவித்தார். தினமும் காலை, மதியம், மாலை எனத் தூதரகத்தைத் தொடர்புகொண்டும், மின்னஞ்சல் அனுப்பியும் நடவடிக்கை இல்லை; தூதரகம் உரிய நேரத்தில் தலையிட்டிருந்தால் இந்தப் பிரச்சனையே எழுந்திருக்காது; நாடாளுமன்ற உறுப்பினர் தலையிட்ட பிறகே மீட்பு நடவடிக்கைகள் வேகமெடுத்தன” என்றும் அவர் கூறினார். இந்த விவகாரத்தின் பின்னணிகளைத் தனியாகத் தெரிவிப்பதாகக் கூறிய தந்தை அருள் மோரேஸ், “மகள் பத்திரமாகத் திரும்பியதே முதன்மையான மகிழ்ச்சி!” என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.