தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

13 Nov 2025, 3:30 pm
விளையாட்டு

காது கேளாதோருக்கான ஒலிம்பிக் தொடக்க விழாவில் தேசிய கொடியை ஏந்தும் மதுரை மாணவி

25ஆவது காது கேளாதோருக் கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நவம்பர் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் தொடரில் 111 பேர் கொண்ட இந்திய அணியினர் தட களம், பேட்மிண்டன், கோல்ப், ஜூடோ,  கராத்தே, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, மல்யுத்தம் மற்றும் டென்னிஸ் ஆகிய பிரிவுகளில் பங்கேற்கிறார்கள். இந்நிலையில், காது கேளா தோருக்கான ஒலிம்பிக் தொடரில் கலந்து கொள்ள இந்திய அணியின் முதல் குழுவினர் டோக்கியோ புறப் பட்டுச் சென்றனர். தொடக்க விழாவில்  இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்லும் கவுரவம் பேட்மிண்டன் வீராங்கனை யான ஜெர்லின் அனிகா ஜெயரட்சக னுக்கு வழங்கப்பட்டுள்ளது. 3 முறை தங்கப்பதக்கம் வென்றவரான ஜெர்லின் தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்தியா-தெ.ஆ., இடையேயான டெஸ்ட் தொடர் : இன்று முதல் தொடக்கம்

டெஸ்ட், ஒருநாள், டி-20 போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட்  தொடரின் முதல் ஆட்டம், மேற்குவங்க  மாநிலத்தின் தலை நகர் கொல்கத்தாவில் உள்ள  ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை அன்று காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடம் : ஈடன் கார்டன், கொல்கத்தா / நேரம் : காலை 9:30 சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார்

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி

சென்னை - மதுரை 2025

இன்னும் 13 நாட்கள்

ஜெர்மனி ஆதிக்கம்

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின் 14ஆவது சீசன் நவம்​பர் 28 முதல் டிசம்​பர்  10ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்​றும் மதுரை​யில் நடை​பெற உள்ளது. இதில் போட்டியை நடத்​தும் இந்​தியா  உட்பட 24 அணிகள் கலந்து கொள்​கின்றன. இந்த உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனி தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்நாடு இதுவரை 7 முறை (1982, 1985, 1989, 1993, 2009, 2013, 2023) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக இந்தியா (2001, 2016) மற்றும் அர்ஜெண்டினா (2005, 2021) தலா 2 முறையும், ஆஸ்திரேலியா (1997), பாகிஸ்தான் (1979) தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. ஆஸ்திரேலியா அணி அதிக பட்சமாக 3 முறை (1982, 1989, 2005) இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை இழந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் அனல் பறக்கும் ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் 21 வயதிற்குட்பட்ட இளசுகள் மட்டும் பங்கேற்பதால் வழக்கம் போல நடப்பு சீசன் போட்டிகள் அதிரடி ஆட்டத்தால் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் இந்தியா, ஜெர்மனி, அர்ஜெண்டினா வீரர்களின் அதிரடி ஆட்டம் பிரமிக்கும் வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.