‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ சங்கம விழா
11 May 2026, 11:58 pm
<p><strong>‘மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்’ சங்கம விழா</strong></p><p>மதுரை, மே 11- ஸ்ரீ கோபால கிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி பள்ளியில் 1991-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட “மீண்டும் பள்ளிக்குச் செல்வோம்” என்ற சங்கம விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி யில் முன்னாள் மாணவர்கள் பல ஆண்டு களுக்குப் பிறகு ஒன்றுகூடி பள்ளி நாட்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழா விற்கு எஸ்.வெங்கடேஸ்வரன், பி.தியாகு, கே.முத்துகிருஷ்ணன் ஆகியோர் வர வேற்பளித்தனர். விழாவிற்கு பள்ளி செயலாளர் இ.எம். ஜி.எஸ்.இந்திராணி தலைமை தாங்கினார். இ.எம்.ஜி.எஸ்.போத்தி கோபால கிருஷ்ணன் மற்றும் இ.எம்.ஜி.அருண் போத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் ஆர்.மேரி நிர் மலா நிகழ்ச்சியை வழிநடத்தினார். சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் சி.இலக்குவன், எஸ்.சண்முகநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர் வி.மேரி ஏஞ்சல் மற்றும் ஓய்வுபெற்ற சத்து ணவு அமைப்பாளர் டி.ஜெயவீரன் ஆகி யோர் கலந்து கொண்டு முன்னாள் மாண வர்களை வாழ்த்தினர். நிகழ்ச்சியின் போது பழைய அனு பவங்கள், ஆசிரியர்களின் வழிகாட்டுதல், பள்ளி நினைவுகள் குறித்து முன்னாள் மாண வர்கள் நெகிழ்ச்சியுடன் பேசினர். இறுதி யில் எம். முத்தழகு மற்றும் எஸ்.எம்.மணி கண்டன் நன்றியுரை வழங்கினர். இந்த விழா வினை ஆலாத்தூர் எஸ்.சுதாகர் தொகுத்து வழங்கினார்.</p>
