தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரையில் கெட்டுப்போன,200 கிலோ ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்; கடைக்கு சீல்

17 Jun 2026, 9:26 pm
மதுரையில் கெட்டுப்போன,200 கிலோ ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்; கடைக்கு சீல்

மதுரையில் கெட்டுப்போன,200 கிலோ ஆடு, கோழி இறைச்சி பறிமுதல்; கடைக்கு சீல்

மதுரை, ஜூன் 17- மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யப்பட்டதாக வந்த புகாரின் பேரில் உணவுப் பாது காப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 1,200 கிலோ எடையுள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மோயிசன் (57) என்பவர் “மோயிசன் மட்டன் கடை” என்ற பெயரில் இறைச்சிக் கடை நடத்தி வந்தார்.

இங்கு கெட்டுப்போன ஆடு மற்றும் கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவ தாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சிவராம பாண்டியன் தலைமையிலான அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது மாநகராட்சி யின் முத்திரை பதிக்கப்படாத ஆட்டு இறைச்சி மற்றும் முறையாக பதப்படுத்தப்படாத ஆடு, கோழி இறைச்சி உள்ளிட்ட மொத்தம் 1,200 கிலோ இறைச்சி கண்டறி யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி மீது ப்ளீச்சிங் பவுடர் தூவி பாதுகாப்பான முறை யில் அழிக்கப்பட்டது.

மேலும், விதிமீறல்கள் கண்டறி யப்பட்டதால் சம்பந்தப்பட்ட இறைச்சிக் கடைக்கு அதிகாரி கள் சீல் வைத்தனர். ஆய்வின்போது, ஆட்டு இறைச்சியின் எடையை அதி கரிக்கும் நோக்கில் சிரிஞ்ச் மூலம் தண்ணீர் செலுத்தப்பட்டி ருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இதற்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகள் கிடைத்த பின்னர், உணவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.