மதுரையில் பாதாளச் சாக்கடை கழிவுநீரால் மக்கள் அவதி
21 Jul 2026, 9:39 pm
<p><strong>மதுரையில் பாதாளச் சாக்கடை கழிவுநீரால் மக்கள் அவதி</strong></p><p>மதுரை, ஜூலை 21- மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட செல் லூர், கோச்சடை உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பாதாளச் சாக்கடை கழிவுநீர் குடி யிருப்புகளை சூழ்ந்து தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சூழ்ந்து நிற்கும் கழிவுநீர் செல்லூர் சுற்றுவட்டாரத்தில் பந்தல்குடி கால்வாய்க்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் போது பாதாளச் சாக்கடை குழாய்கள் பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதன் கார ணமாக கழிவுநீர் வெளியேற முடியாமல் குடி யிருப்புகளை சூழ்ந்து தேங்கி நிற்கிறது. குறிப்பாக, மாநகராட்சி 27 ஆவது வார் டுக்கு உட்பட்ட சுயராஜ்யபுரம் 6 ஆவது தெரு வில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வீடு களைச் சுற்றி முழங்கால் அளவிற்கு கழிவு நீர் தேங்கி நிற்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்ல முடியாமலும், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் காய்ச்சல், மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களால் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சாலை மறியல் இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி களிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என் றும், சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு செய்த பிறகும் பிரச்சனை தொடர்ந்து வருவ தாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து ஆத்திரமடைந்த பொது மக்கள், பந்தல்குடி கால்வாய் அருகே கோரிப்பாளையம் செல்லும் சாலையில் மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநக ராட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், உடனடியாக கழிவுநீரை அகற்றி நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலி யுறுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினரும் மாநகராட்சி அதிகாரி களும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தேங்கியுள்ள கழிவுநீரை உடனடி யாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக் கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட வய தான பெண் ஒருவர் கண்ணீருடன் பேசும் போது, “மூன்று மாதங்களாக வீட்டுக்குள் ளேயே முடங்கிக் கிடக்கிறோம். தினமும் காய்ச்சல் வருகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதிகாரிகளிடம் எத்தனை முறை கூறினாலும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை” என்று வேதனையுடன் தெரி வித்தார். கோச்சடை இதற்கிடையில், மதுரை மாநகராட்சி 66 ஆவது வார்டுக்கு உட்பட்ட கோச்சடை பகுதி யில் உள்ள முத்தையா கோவில் 2 ஆவது தெரு விரிவாக்கம், அங்காள ஈஸ்வரி நகர், அசோக் நகர் 2 ஆவது தெரு, முத்துராம லிங்கதேவர் தெரு, கோச்சடை மெயின் ரோடு உள்ளிட்ட பல பகுதிகளிலும் பாதாளச் சாக்கடை கழிவுநீர் தெருக்களில் வெளியேறி 2 மாதங்களுக்கும் மேலாக தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், குழந்தைகள் தெருக்களில் விளையாட முடியாத சூழலும் உருவாகியுள்ளது. மேலும் கோச்சடை மெயின் ரோட்டில் குப்பைக் கிடங்கு அருகே பாதாளச் சாக்கடை கழிவுநீர் வெளியேறி குப்பைகளுடன் கலந்து துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அப்பகு தியில் மிகப்பெரிய சுகாதார சீர்கேடு நிலவி வருவதோடு, தொற்றுநோய்கள் பரவும் அபா யமும் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பிரச்சனை குறித்து அப்பகுதி மாமன்ற உறுப்பினர் உரிய கவனம் செலுத்த வில்லை என்றும், புதிதாக பொறுப்பேற் றுள்ள தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் கருத்து தெரி விப்பதைத் தவிர நிரந்தர தீர்வு காண எந்த நட வடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். கோச்சடை பகுதியைச் சேர்ந்த பார்வதி, மகாலட்சுமி, சின்னப்பொன்னு ஆகியோர் கூறுகையில், “ஒவ்வொரு தெருவிலும் பாதா ளச் சாக்கடை கழிவுநீர் பிரச்சனை நீடித்து வருகிறது. வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்று வலியுறுத்தினர். மதுரை மாநகரின் முக்கிய குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து நிலவி வரும் பாதா ளச் சாக்கடை கழிவுநீர் பிரச்சனை மற்றும் அதனால் உருவாகியுள்ள சுகாதார சீர்கேடு குறித்து மாநகராட்சி நிர்வாகம் அவசர நட வடிக்கை எடுத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைத்து பகு திகளிலும் மக்களின் ஒருமித்த கோரிக்கை யாக உள்ளது.</p>
