முந்தய பக்கம்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் போக்சோவில் கைது!

5 hours before
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் போக்சோவில் கைது!

மதுரை அருகே வேலம்மாள் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் என்பவர் கோக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் விரகனூர் பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 2025-26 கல்வியாண்டில் பயின்ற பிளஸ்-2 மாணவிகளுக்கு நேரடியாகவும், செல்போன் மூலமாகவும் பாலியல் தொந்தரவு அளித்ததாக இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார் மீது புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சில மாணவிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் ரகசிய புகார் மனு அளித்துள்ளனர். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையின் அடிப்படையில், ஊமச்சிகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமார், பள்ளி தங்கும் விடுதி பாதுகாவலர் உள்ளிட்ட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணையின்போது, ராஜ்குமார் மீது மாணவிகள் ஏற்கனவே பள்ளி முதல்வரிடம் புகார் அளித்திருந்ததாகவும், அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புகார் அளித்த மாணவிகளிடமும் காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், குற்றச்சாட்டுக்கு உள்ளான இயற்பியல் ஆசிரியர் ராஜ்குமாரை ஊமச்சிகுளம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram