தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் கட்டாயம் அனுமதியின்றி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

14 May 2026, 9:05 pm
பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் கட்டாயம் அனுமதியின்றி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
<p><strong>பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் கட்டாயம் அனுமதியின்றி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்</strong></p><p>மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை மதுரை, மே 14- மதுரை மாவட்டத்தில் பள்ளி மாணவர் களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகை யில், தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான சிறப்பு ஆய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கே.ஜே.பிரவீன் குமார் தலைமையில், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நடை பெற்ற இந்த ஆய்வில், மதுரை மாநகர், மேலூர் மற்றும் வாடிப்பட்டி பகுதிகளைச் சேர்ந்த 633 பள்ளிகளின் 1,316க்கும் மேற் பட்ட பள்ளி வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில் 306 வாக னங்கள் நேரடி ஆய்விற்காக கொண்டு வரப்பட்டிருந்தன. அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் இருக்க வேண்டிய 16 பாதுகாப்பு அம்சங்கள் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டன. குறிப்பாக, முதலுதவி பெட்டி, வேகக் கட்டுப்பாட்டு கருவி, தீய ணைப்பான், வாகன பராமரிப்பு நிலை, முன் மற்றும் பின்புற கண்காணிப்பு கேமராக்கள் போன்ற அம்சங்கள் ஆய்வு செய்யப்பட் டன. மேலும், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை குழுவின ரின் மூலம், அவசர கால முதலுதவி, உயிர் காக்கும் சிகிச்சை, மாணவர் பாதுகாப்பு நடைமுறைகள், பாதுகாப்பான வாகன இயக்கம் குறித்து ஓட்டுநர்களுக்கும் பணி யாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆய்வின் போது ஆட்சியர் கே.ஜே.பிர வீன் குமார் கூறுகையில், “அரசு அறி வுறுத்தியுள்ள அனைத்து பாதுகாப்பு விதி களையும் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். சிறப்பாக செயல்படும் பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு இந்த ஆண்டு முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் விருது கள் வழங்கப்படும்” என்றார். மேலும், அனுமதியின்றி மாணவர் களை ஏற்றிச் செல்லும் ஷேர் ஆட்டோக்கள் குறித்து விபத்துகள் மற்றும் புகார்கள் அதி கரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பள்ளி நிர்வாகங்களின் ஒப்புதல் மற்றும் போக்குவரத்துத் துறை அனுமதி இல்லாமல் மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்றும், அவை பறிமுதல் செய்யப் படும் என்றும் எச்சரித்தார். பெற்றோர்களும் குழந்தைகளை பாது காப்பாக மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளி வாகனங்களில் அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறி வுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.