ரூ.1,024.66 கோடி மதிப்பிலான மதுரை வளையச்சாலை திறப்பு
15 Jul 2026, 9:22 pm

ரூ.1,024.66 கோடி மதிப்பிலான மதுரை வளையச்சாலை திறப்பு

மதுரை, ஜூலை 15- இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில், தேசிய நெடுஞ்சாலை– 744ஏ-இன் ஒரு பகுதியாக வாடிப்பட்டி– தாமரைப்பட்டி இடையே அமைக்கப்பட் டுள்ள 29.96 கிலோமீட்டர் நீளமுள்ள நான்கு வழி மதுரை வளையச்சாலைப் பணி நிறை வடைந்து, போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரூ.1,024.66 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திட் டம், மதுரையின் போக்குவரத்து உள்கட்ட மைப்பில் முக்கிய முன்னேற்றமாக கருதப் படுகிறது.

இந்த வளையச்சாலை, தேசிய நெடுஞ் சாலை–44 (திண்டுக்கல்–மதுரை) மற்றும் தேசிய நெடுஞ்சாலை–38 (திருச்சி–மதுரை) ஆகியவற்றை இணைக்கிறது. இதன் மூலம் நகரைக் கடந்து செல்லும் கனரக மற்றும் நீண்டதூர சரக்கு வாகனங்கள் மதுரை நக ருக்குள் நுழையாமல் நேரடியாக வளை யச்சாலை வழியாகச் செல்ல முடியும். இத னால் நகரின் போக்குவரத்து நெரிசல் குறை வதுடன், வடக்கு மதுரை கிராமங்களுக்கும் மேம்பட்ட சாலை இணைப்பு கிடைக்கிறது.

நவீன கட்டமைப்பு வசதிகள்

இந்தத் திட்டத்தில் 2 மேம்பாலங்கள், 2 வாகன மேம்பாலங்கள், 2 வாகன சுரங்கப் பாதைகள், 5 இலகுரக வாகன சுரங்கப் பாதை கள், 4 சிறிய வாகன சுரங்கப் பாதைகள் மற்றும் 2 பாதசாரிகள் சுரங்கப் பாதை கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 4 பெரிய பாலங்கள், 29 சிறிய பாலங்கள், பகுதி குளோ வர்லீஃப் சந்திப்பு மற்றும் அலங்காநல்லூர் அருகே இளவன்குளத்தில் நவீன சுங்கச் சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வகுத்தமலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் பாது காப்பாகக் கடந்து செல்லும் வகையில் ஒலி தடுப்புச் சுவருடன் கூடிய வனவிலங்கு மேம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் பயன்பாட்டிற்காக இருபுறங்களி லும் மொத்தம் 11.32 கிலோமீட்டர் நீளத்தில் சேவைச் சாலைகளும் உருவாக்கப்பட் டுள்ளன.

பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

இந்த வளையச்சாலை திட்டம், போக்கு வரத்து நெரிசலைக் குறைப்பதுடன் தொழில்பேட்டைகள், வணிக மையங்கள் மற்றும் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு விரைவான சாலை இணைப்பை ஏற்படுத் தும். இதனால் பயண நேரம், எரிபொருள் செலவு மற்றும் வாகன இயக்கச் செலவு குறைவதுடன், உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சாலை முழுவதும் நவீன போக்கு வரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளதால், போக்குவரத்து ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு மேம்படும். நகர்ப்புற சாலைகளின் போக்குவரத்து அழுத்தம் குறைவதால் காற்று மாசுபாடும் குறைந்து, மதுரையின் புறநகர் இணைப்பும் மேலும் வலுப்பெறும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித் துள்ளது.