தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை மண்டலத்தில் 281 டாஸ்மாக் கடைகள் மூடல் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகில் அகற்றுவதற்கு வரவேற்பு ஒரே பகுதியில் குவிந்துள்ள மனமகிழ் மன்றங்களையும் குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

13 May 2026, 9:34 pm
மதுரை மண்டலத்தில் 281 டாஸ்மாக் கடைகள் மூடல் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகில் அகற்றுவதற்கு வரவேற்பு ஒரே பகுதியில் குவிந்துள்ள மனமகிழ் மன்றங்களையும் குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மண்டலத்தில் 281 டாஸ்மாக் கடைகள் மூடல் பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் அருகில் அகற்றுவதற்கு வரவேற்பு ஒரே பகுதியில் குவிந்துள்ள மனமகிழ் மன்றங்களையும் குறைக்க பொதுமக்கள் கோரிக்கை

மதுரை, மே 13- தமிழக அரசின் புதிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மதுரை மண்டலத்தில் செயல் பட்டு வரும் 281 டாஸ்மாக் மதுபானக் கடை கள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ளது.

பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இயங்கி வரும் மதுக்கடை களை அகற்றும் அரசின் நடவடிக்கை சமூக நலனை முன்னிறுத்தியதாக பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.

மதுரை மண்டலத்தில், தூத்துக்குடி – 63; விருதுநகர் – 37; திருநெல்வேலி – 33; மதுரை தெற்கு – 32; இராமநாதபுரம் – 29; திண்டுக்கல் – 26; சிவகங்கை – 18; கன்னியாகுமரி – 18; மதுரை வடக்கு – 13 என டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

இதன்படி, மதுரை மண்டலத்தில் மட்டும் மொத்தம் 281 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.

இந்த நடவடிக்கைகளை நிர்வாக ரீதி யாக விரைவாக செயல்படுத்தும் வகையில், டாஸ்மாக் நிறுவனத்தின் புதிய மேலாண் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மூடப்பட உள்ள டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, அவர்களது கல்வித்தகுதி மற்றும் அனு பவத்திற்கு ஏற்ப மாற்றுப் பணிகளை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

பல ஆண்டுகளாக பணி யாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் மனிதநேய அடிப் படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதேநேரத்தில், மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரே பகுதியில் அதிக அளவில் டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வருவது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, மதுரையில் மூடப்பட உள்ள 13 கடைகளில் நகர்ப்பகுதியில் எந்தக் கடை யும் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளி யாகியுள்ள நிலையில், சில பகுதிகளில் ஒரே சாலையில் பல மதுபான விற்பனை மையங் கள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆரப்பாளையம் கிராஸ் ரோடு, கேப்ரான் ஹால் பள்ளி அருகே இரு டாஸ்மாக் கடை கள், டவுன்ஹால் ரோட்டில் ஒரே தெருவில் மூன்று டாஸ்மாக் கடைகள் இயங்கி வரு கின்றன.

அதேபோல் தீக்கதிர் அலுவலகம் அருகிலும் அதன் பின்புறப் பகுதிகளிலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றங்கள் செயல்பட்டு வரு கின்றன.

சோலை அழகுபுரம் மெயின் ரோட்டில் அருகிலேயே இரண்டு டாஸ்மாக் மதுபான கடைகளும் அதேபோல் ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு வீரகாளியம்மன் கோவில் அருகில் ஒரு டாஸ்மாக் மதுபான கடையில் சுப்பிரமணியபுரம் மார்க்கெட் அருகில் தனி யார் மதுபான கூடம் என்று நான்கு மதுபான கடைகள் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இயங்கி வருகின்றன மேலும், கூடல்நகர் மற்றும் அஞ்சல் நகர் பகுதிகளில் பல டாஸ்மாக் கடைகள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் இயங்கி வருவதாக வும், சிக்கந்தர் சாவடி அருகே தனியார் பள்ளி அருகிலேயே எலைட் மதுபானக் கூடம் செயல்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

காளவாசல் முதல் கோச்சடை தண்ணீர் தொட்டி வரையிலான பகுதியில் அரசு உயர் ரக வெளிநாட்டு மதுபான விற்பனை மையம், ஒரு டாஸ்மாக் கடை, ஐந்து தனியார் மன மகிழ் மன்றங்கள் மற்றும் பார்கள் செயல் பட்டு வருகின்றன.

அதேபோல் தல்லாகுளம் பெருமாள் கோவில் எதிரே நான்கு தனியார் மனமகிழ் மன்றங்கள் இயங்கி வருவதாக வும் கூறப்படுகிறது.

ஒரே பகுதியில் 100 மீட்டர் இடைவெளிக் குள் பல மதுபான விற்பனை மையங்கள் மற்றும் மனமகிழ் மன்றங்கள் செயல்படுவது சமூக அமைதிக்கும், பெண்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக சமூக ஆர்வ லர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, பள்ளிகள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகிலுள்ள கடைகளை அகற்றும் நடவடிக்கையுடன் மட்டுமல்லாமல், ஒரே பகுதியில் அதிகமாக குவிந்துள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மனமகிழ் மன்றங்களின் எண்ணிக்கையையும் குறைக்கும் வகையில் தமிழக அரசு விரி வான ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.