தனியார் மருத்துவமனைகளில் பல்லாயிரம் செலவு மதுரை அரசு மருத்துவமனையில் கருவியல் - மரபணு பரிசோதனை மையம் வருமா?
18 Jul 2026, 9:36 pm

தனியார் மருத்துவமனைகளில் பல்லாயிரம் செலவு மதுரை அரசு மருத்துவமனையில் கருவியல் - மரபணு பரிசோதனை மையம் வருமா?

தென் தமிழகத்தின் மிக முக்கியமான அரசு மருத் துவ மையமான மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நம்பிக்கை யாகத் திகழ்கிறது.

இதய நோய், புற்று நோய் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வரை பல துறைகளில் உயர்தரச் சேவைகளை வழங்கி வரும் இம்மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான ‘கருவி யல் மருத்துவம்’ (Fetal Medicine) மற்றும் ‘மரபணு பரிசோதனை’ (Gene tic Testing) வசதிகள் முழுமையாக இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

பரிசோதனைகளின் அவசியம் கர்ப்பகாலத்தில் குழந்தையின் உடல் உறுப்புகள் சீராக உள்ளனவா, பிறவிக்குறைபாடுகள் மற்றும் மரபணு பாதிப்புகள் ஏதுமுண்டா என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்ட றிவது தாய்-சேய் இருவரின் ஆரோக்கி யத்திற்கு மிக அவசியம்.

டவுன் சிண்ட்ரோம், பிறவி இதயக் குறைபாடு கள் மற்றும் உறுப்பு வளர்ச்சி குறைபாடு களை முன்கூட்டியே கண்டறிய பனிக்குட நீர் பரிசோதனை (Amni ocentesis) போன்ற நவீன மருத்துவ முறைகள் உலகளவில் பின்பற்றப் படுகின்றன.

ஏழை மக்களின் தவிப்பு தற்போது இத்தகைய பரிசோத னைகள் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே உள்ளன.

ஒரு பரிசோதனைக்கு ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை செல வாகிறது; சில நேரங்களில் கூடுதல் பரி சோதனைகளால் இச்செலவு ரூ.50,000-ஐத் தாண்டுகிறது.

கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் இவ்வ ளவு பெரும் தொகையைச் செலவிட முடியாமல் தவித்து வருகின்றனர்.

உதாரணமாக, சமீபத்தில் ஒரு கர்ப்பி ணிக்குக் குழந்தையின் வளர்ச்சி குறைபாட்டைக் கண்டறிய அம்னியோ சென்டிசிஸ் பரிசோதனை தேவைப் பட்டபோது, அது அரசு மருத்துவ மனையில் இல்லாததால் தனியார் மருத்துவமனையை நாடி அக்குடும்பம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானது.

சாத்தியமான முன்னெடுப்பு இராஜாஜி மருத்துவமனையில் ஏற்கெனவே அதிநவீன ஸ்கேனர்கள், சி.டி., பெட்-சி.டி (PET-CT) வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த மகப்பேறு, கதிரியக்கவியல் நிபுணர்கள் உள்ள னர்.

இந்த உள்கட்டமைப்புடன், கூடுத லாகச் சில மரபணு நிபுணர்கள் மற்றும் ஆய்வக வசதிகளை ஏற்படுத்தினால், கருவியல் மருத்துவப் பிரிவை எளிதா கத் தொடங்க முடியும் என மருத்துவத் துறையினர் கருதுகின்றனர்.

அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கை இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் க. நீதிராஜா கூறுகையில், “தென் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயி ரக்கணக்கான பெண்கள் மேம்பட்ட பரிசோதனைகளுக்காகத் தனியார் மருத்துவமனைகளை நாடிப் பொரு ளாதாரச் சுமையைச் சந்திக்கின்றனர்.

இராஜாஜி மருத்துவமனையில் Fetal Medicine, NIPT, Amniocentesis, Fetal Echo உள்ளிட்ட அனைத்து மேம்பட்ட வசதிகளையும் தமிழக அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இந்தப் பரிசோதனைகள் இலவசமாகக் கிடைத்தால், ஏழை எளிய மக்கள் நேரடியாகப் பயனடைவார்கள்,” என்று வலியுறுத்தினார்.

காலத்தின் தேவை மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திரு நெல்வேலி, தென்காசி மற்றும் கன்னி யாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்க ளைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்க ளுக்கு இம்மையம் பெரும் உதவி யாக அமையும்.

இது பிறவிக்குறை பாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து, தாய் மற்றும் குழந்தையின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, ஏழை குடும்பங்களின் மருத்துவச் செலவையும் பெருமளவு குறைக்கும்.

எனவே, பொதுமக்களின் இந்த நியாய மான கோரிக்கையைத் தமிழக அரசு விரைந்து பரிசீலித்து நடைமுறைப் படுத்த வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த வேண்டு கோளாக உள்ளது. ஜெ.பொன்மாறன்