தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிநவீன இதய சிகிச்சையில் புதிய வரலாறு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மாபெரும் சாதனை

2 hours before
அதிநவீன இதய சிகிச்சையில் புதிய வரலாறு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மாபெரும் சாதனை

அதிநவீன இதய சிகிச்சையில் புதிய வரலாறு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மாபெரும் சாதனை

மதுரை, ஜூன் 26- தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றாக விளங்கி வரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனை, உயர்தர மருத்துவச் சேவைகளை ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக வழங்கி தொடர்ந்து பல்வேறு மருத்துவச் சாதனைகளைப் படைத்து வருகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள், நரம்பியல், இருதயவியல், அவசர மருத்து வம், புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு அங்கீகாரங்களைப் பெற்றுள்ள இம்மருத்துவமனை, தற்போது இருதயவியல் துறையில் மற்றொரு வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனியார் மருத்துவமனைகளில் பல லட்சம் ரூபாய் செலவாகும் உலகத் தரத்திலான அதி நவீன இதய சிகிச்சைகள், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

மாநில அளவில் முதலிடம் 2024 செப்டம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாட்டிலேயே அதிக எண்ணிக்கை யிலான அதிநவீன இருதய செயல்முறை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட அரசு மருத்துவமனையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

தற்கான பாராட்டு மற்றும் முதற்பரிசு, சென்னையில் நடைபெற்ற “ரீசன்ட் அப்டேட்ஸ் இன் கார்டியாலஜி” (Recent Updates in Cardiology) மாநாட்டில், தேசிய நலவாழ்வுக் குழுமத்தின் (National Health Mission - NHM) திட்ட இயக்குநர் மரு. அ

ருண் தம்புராஜ், இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை முன்முயற்சி (Tamil Nadu Accident and Emergency Care Initiative - TAEI) ஆணையர் வினித், இ.ஆ.ப., ஆகியோரால் வழங்கப்பட்டது.

முதன்முறையாக அதிநவீன இதய சிகிச்சை விருதுநகர் மாவட்டம் இலந்தைக் குளத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு சைனஸ் வெனோசஸ் டிபெக்ட் (Sinus Venosus Defect - SVC Type Atrial Septal Defect) எனப்படும் அரிய வகை பிறவிக்குறைபாடு கண்டறியப்பட்டது.

பொதுவாக இந்நோய்க்கு மார்பெலும்பை அறுத்து மேற்கொள்ளப் படும் திறந்த இதய அறுவை சிகிச்சை (Open Heart Surgery) மட்டுமே சிகிச்சையாக இருந்து வந்த நிலையில், மார்பில் தழும்பு ஏற்படாமல், உலகின் சில முன்னணி மருத்துவ மையங்களில் மட்டுமே செய்யப்படும் கவர்டு ஸ்டென்ட் எக்ஸ்க்ளூஷன் (Covered Stent Exclusion) என்ற அதிநவீன சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இ

ந்தச் சிகிச்சை கடந்த 16.05.2026 அன்று இருதயவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜி. செல்வராணி தலைமையிலான மருத்துவக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் மூத்த இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரமோத் சாகர், இச்சிகிச்சைக்கான புராக்டர் ஆக இருந்து தொழில்நுட்ப வழிகாட்டுதல் வழங்கினார்.

தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இவ்வகை அதி நவீன சிகிச்சை வெற்றிகரமாக மேற் கொள்ளப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். ஓராண்டில் சாதனை படைத்த இருதயவியல் துறை 2025 ஜூன் முதல் 2026 மே வரையிலான காலகட்டத்தில், புறநோயாளிகள் – 1,31,105 உள்நோயாளிகள் – 3,992 இதய மின் பதிவேடு (Electrocardiogram - ECG) – 1,02,461 இதய எதிரொலி பரிசோதனை (Echocardiogram - ECHO) – 83,070 டிரெட்மில் பரிசோதனை (Treadmill Test - TMT) – 1,372 உணவுக்குழாய் வழி இதய எதிரொலி பரிசோதனை (Transesophageal Echocardiography - TEE) – 264 24 மணி நேர இதயத் துடிப்பு கண்காணிப்பு (Holter ECG) – 701 கேத்லாப் (Cardiac Catheterization Laboratory - Cath Lab) சிகிச்சைகள் கடந்த ஓராண்டில் மட்டும், கொரோனரி ஆஞ்சியோகிராம் (Coronary Angiogram) – 2,996 கொரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி (Coronary Angioplasty with Stent) – 1,168 பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி (Balloon Angioplasty) – 215 நிரந்தர இதயத் துடிப்பு முடுக்கி (Permanent Pacemaker Implantation - PPI) – 113 தற்காலிக இதயத் துடிப்பு முடுக்கி (Temporary Pacemaker Implantation - TPI) – 295 பலூன் மூலம் மைட்ரல் வால்வு சுருக்கம் நீக்கும் சிகிச்சை (Percutaneous Transvenous Mitral Commissurotomy - PTMC) – 64 (இதில் 7 கர்ப்பிணிகள்) ஏட்ரியல் செப்டல் டிஃபெக்ட் (ASD) சாதன அடைப்பு – 74 வென்ட்ரிகுலர் செப்டல் டிஃபெக்ட் (VSD) சாதன அடைப்பு – 5 பேட்டன்ட் டக்டஸ் ஆர்டீரியோசஸ் (PDA) சாதன அடைப்பு – 26 சர்வதேச தரத்தில் மருத்துவ சேவை 1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இருதயவியல் துறை, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் (TNMSC), பவர் கிரிட் கார்ப்பரேஷனின் நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டம் மற்றும் ஜப்பான் பன்னாட்டு ஒத்துழைப்பு முகமை (JICA) திட்டத்தின் கீழ் அதிநவீன கேத்லாப் வசதிகளைப் பெற்று, இன்று சர்வதேசத் தரத்தில் இதய சிகிச்சை வழங்கும் மையமாக உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை செலவாகும் உயிர்காக்கும் இதய சிகிச்சைகள் அனைத்தும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஏழை, எளிய மக்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருவது தென் தமிழக மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.