தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரையில் மழைக்கு தாங்காத சாலைகள் சிதிலமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி; விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

6 May 2026, 9:11 pm
மதுரையில் மழைக்கு தாங்காத சாலைகள் சிதிலமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி; விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரையில் மழைக்கு தாங்காத சாலைகள் சிதிலமடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி; விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை, மே 6- மதுரை மாநகர் பகுதியில் முக்கிய சாலை கள் சிதிலமடைந்து, பள்ளங்களால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் சிர மங்களை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள மேல மாரட் வீதி மற்றும் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி பகுதிகளில் சாலைகள் பல இடங்களில் சேதமடைந்து காணப்படு கின்றன.

மேல மாரட் வீதி – டவுன்ஹால் ரோடு சந்திப்பு பகுதியில், பாதாளச் சாக்கடை கழிவு நீர் கால்வாய் அருகே சாலையின் நடுவில் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங் களில் இந்த பள்ளம் விபத்துக்கான அபா யத்தை அதிகரிக்கிறது.

இதுகுறித்து அப்பகுதி ஆட்டோ ஓட்டு நர்கள் கூறுகையில், “சில தினங்களுக்கு முன்புதான் இந்த சாலை சீரமைக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் மீண்டும் சாலை சேதமடைந் துள்ளது. சிறிய மழைக்கே சாலைகள் தாங்கா மல் பள்ளங்கள் உருவாகி விடுகின்றன” என குற்றம்சாட்டினர்.

அதேபோல் மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியிலும் பல இடங்களில் சிறிய பள்ளங்கள் உருவாகி இருந்த நிலையில், அவற்றை முறையாக சரிசெய்யாததால் தற்போது மழை நீர் தேங்கி பெரிய பள்ளங்களாக மாறி யுள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றன.

மேலும், எல்லீஸ் நகர் 70 அடி சாலையில், மீனாட்சி அம்மன் கோவில் வாகன காப்ப கத்திலிருந்து எல்லீஸ் நகர் மேம்பாலம் செல்லும் பகுதியில் மழைநீர் பெருமளவில் தேங்கி நிற்கிறது. மழைநீர் கால்வாய்களில் சரியாக செல்லாததால் நீர் தேக்கம் நீடித்து, போக்குவரத்துக்கும் பொதுமக்களின் அன்றாட செயல்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதுகுறித்து அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்ததாவது: “மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சமன்படுத்தி, நீரேற்ற வசதிகளை சீர மைத்து, மழைநீர் வெளியேறும் வகையில் நட வடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலி யுறுத்தினர்.

மொத்தத்தில், மதுரை மாநகரில் சாலை கள் தரமற்ற முறையில் சீரமைக்கப்படுவது மீண்டும் மீண்டும் மழைக்காலத்தில் வெளிப்படுகிறது. இதனால் பொதுமக்க ளின் பாதுகாப்பும், சுகாதாரமும் பாதிக்கப் படுகின்றன. இதனால் அதிகாரிகள் உட னடியாக நிலையான தீர்வு மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் எதிர் பார்க்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.