தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடுத்த 40 ஆண்டுகால வளர்ச்சியை நோக்கிய மதுரை ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்

5 Jun 2026, 12:38 am
அடுத்த 40 ஆண்டுகால வளர்ச்சியை நோக்கிய மதுரை ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்

அடுத்த 40 ஆண்டுகால வளர்ச்சியை நோக்கிய மதுரை ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள்

மதுரை, ஜூன் 4 - மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்ட மேம்பாட்டுப் பணிகளை மதுரைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

மதுரை மாநகரா ட்சிப் பொறுப்பு மேயர் நாகராஜன், சென்னையிலிருந்து வந்திருந்த ரயில்வே மூத்த பொறியாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சு. வெங்கடேசன், ரயில்வே திட்டங்கள், வந்தே மாதரம் சுற்றறிக்கை விவகாரம், சிபிஎஸ்இ முறைகேடு உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் வழித்தடம் மீண்டும் துவக்கம்! செய்தியாளர் சந்திப்பில் மிக முக்கியமான இரு செய்திகளைப் பகிர்ந்துகொண்ட சு.வெங்கடேசன், தென் தமிழகத்தின் நீண்டகாலக் கன வான மதுரை – அருப்புக்கோட்டை – தூத்துக்குடி புதிய ரயில் வழித்தடத் திட்டம் மீண்டும் உயிர்பெற்றுள்ளதாக மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

ஏறக்குறைய 2,600 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான இத்திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முடக்கி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு மதுரை வந்திருந்த ரயில்வே அமை ச்சரும் இதுகுறித்து முரண்பாடான பதிலையே அளித்திருந்தார்.

எனி னும், தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், தூத்துக்குடி துறை முகத்திற்குப் பொருட்களை எளிதாகக் கொண்டு செல்வதற்கும் இந்த வழித்தடம் அத்தியாவசியமானது என்ப தால், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக, நிறுத்தப்பட்டிருந்த நில எடுப்புப் பணிகளை உடனடியாக மீண்டும் துவங்குமாறு மாநில அரசுக்கு ஒன்றிய ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என விவரித்தார்.

விமான நிலைய வசதிகளுடன் ரூ.375 கோடி மெகா திட்டம் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின்கீழ் பல ரயில் நிலையங்களுக்கு 10 முதல் 15 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட சூழலில், நாடாளுமன்றப் போராட்ட த்தின் வாயிலாக மதுரை ரயில் நிலைய மேம்பாட்டிற்கு 375 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

இது தமிழ்நாட்டிலேயே சென்னை எழும்பூருக்கு அடுத்த படியாக நடைபெறும் மிகப்பெரிய விரிவாக்கப் பணியாகும்.

2027 மார்ச் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்பணி யில், தற்போது 50 விழுக்காட்டிற்கும் அதிகமான கட்டுமானங்கள் நிறை வடைந்துள்ளன. மழைக்காலங்களில் பயணிகள் சிரமப்படாமல் இருக்கப் பணிகளை விரைந்து முடிக்க அதி40 ஆண்டுகால வளர்ச்சிக்கான புதிய வசதிகளின் பட்டியல்

: தற்போது நாள் ஒன்றுக்கு 51,000 பயணிகள் வந்து செல்லும் மதுரை ரயில் நிலையம், அடுத்த 40 ஆண்டுகால ஆன்மீக, பண்பாட்டுச் சுற்றுலா வளர்ச்சியைத் தாங்கும் வகையில் பின்வரும் நவீன வசதி களுடன் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக அவர் பட்டியலிட்டார்: கட்டடப் பரப்பளவு (Terminal Area): இதுவரை 2,500 சதுர மீட்டராக இருந்த கட்டிடப் பரப்பு, 817 சதவிகிதம் அதிகரிக்கப் பட்டு 22,000 சதுர மீட்டராக பிரம்மாண்டமாக விரிவடைகிறது. வணிகப் பரப்பளவு 4,600-லிருந்து 70,000 சதுர மீட்டராக உயர்கிறது. காத்திருப்பு அறைகள்: குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்பு அறை 450-லிருந்து 1,090 சதுர மீட்டராகவும் (மூன்று மடங்கு), ஏசி இல்லாத பொது காத்திருப்பு அறை 300-லி ருந்து 4,236 சதுர மீட்டராகவும் (1,400 மடங்கு) உயர்த்தப்படுகிறது. இதனால் பயணிகள் தரைத்தளத்தில் படுக்கும் அவலம் மாறும் என்றார். தங்கும் வசதிகள்: தற்போதைய நிலை யில் இல்லாத ஓய்வறைகள் (Retiring Rooms) புதிதாக 40 அறைகளாக உருவாக்கப் படுகின்றன. டார்மெட்டரி வசதியில் ஆண் களுக்கு 47 படுக்கைகளும், பெண்களுக்கு 25 படுக்கைகளும் அமைக்கப்படுகின்றன. வாகன நிறுத்துமிடம் (Parking): இருசக்கர வாகன நிறுத்துமிடம் 1,000-லிருந்து 7,500 ஆகவும் (மல்டிலெவல் பார்க்கிங் வசதி யுடன்), கார்கள் நிறுத்துமிடம் 125-லிருந்து 500 ஆகவும், ஆட்டோ நிறுத்துமிடம் 50-லிருந்து 106 ஆகவும் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. நவீன நகர்வுகள்: விமான நிலையப் பாணியில் 37 லிஃப்டுகளும், 27 எஸ்கலேட்டர் களும் (மின் ஏணிகள்) அமைக்கப்பட்டு வருகின்றன. ஃபுட் கோர்ட், பட்ஜெட் ஹோட்டல் வசதிகளும் வரவுள்ளன. மதுரையின் அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கூடல் நகர் பகுதியை 2-ஆவது முனைய மாக (Terminal) மாற்றுவது அவசியம் என்றும், புதிய மாநில அரசு மற்றும் மாவட்ட அமைச்சர்களுடன் இணைந்து இதற்கான கூட்டுக்குழு கூட்டத்தை விரைந்து நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வந்தே மாதரம் சுற்றறிக்கையை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்!

அரசியல் கேள்விகளுக்குப் பதிலளித்த சு. வெங்கடேசன், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள ‘வந்தே மாதரம்’ தொடர்பான சுற்றறிக்கை இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள மதச் சுதந்திரத்திற்கு எதிரானது எனச் சாடினார். “வந்தே மாதரம் பாடலின் நான்கு பத்திகள் இந்தியாவை ஒரு குறிப்பிட்ட மதத்தின் கடவுளாக உருவகப்படுத்து கின்றன. அந்த மத நம்பிக்கை கொண்டவர் கள் அதைப் பாடுவதில் பிரச்சனையில்லை. ஆனால், பிற மதத்தினரையோ, மத நம்பிக்கை இல்லாதவர்களையோ அதைப் பாடக் கட்டாயப்படுத்த முடியாது. ஒருவர் எந்தப் பாடலைப் பாட வேண்டும் என்பதை நரேந்திர மோடியோ, அமித் ஷாவோ தீர்மா னிக்க முடியாது. எனவே, இந்தச் சுற்ற றிக்கையை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாநில நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு உரிய முதன்மை வழங்கப்பட வேண்டும்.” நாடாளுமன்றத்திலும், ஆளுநர் மாளிகையிலும் இப்பாடலை முழுமையாகப் பாடக் கட்டாயப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீட்டில் பெருமளவிலான முறைகேடு

சிபிஎஸ்இ தேர்வு மதிப்பீட்டு முறைகேடு குறித்துப் பேசிய அவர், ஏற்கெனவே மோசடிகளில் சிக்கி ‘கருப்புப் பட்டிய லில்’ வைக்கப்பட்ட நிறுவனம் ஒன்று, விதி களையெல்லாம் தளர்த்தி வேறு பெயரில் மீண்டும் ஒப்பந்தம் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டினார். இந்த மோசடியால் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவனின் 12 ஆண்டுகால பள்ளி வாழ்க்கையின் முக்கி யத் தேர்வில் இத்தகைய குற்றவியல் மோசடி நடந்திருப்பது கவலைக்குரியது. இதற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்திய அவர், இது தொடர்பாகக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதவுள்ளதாகவும், நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சிபிஎம் இப்பிரச்சனையை வலுவாக எழுப்பும் என்றும் விவரித்தார்.

புதிய தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து..

. தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்று ள்ள ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு குறித்த கேள்விக்கு, “புதிய அரசு மக்களின் ஆதரவோடு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளது. அதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அதன் செயல்பாடுகளைக் கவ னிக்க வேண்டும். மக்கள் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செய்தால் வரவேற்போம்; செய்யாவிட்டால் விமர்சிப்போம்; அல்ல தைச் செய்தால் எதிர்ப்போம். அதையும் மீறி மக்கள் விரோதத் திட்டங்களை நடை முறைப்படுத்தினால் மக்களைத் திரட்டிப் போராடுவோம்” என்று தங்களின் அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். மேலும், இம்மாத இறுதியில் ‘திஷா’ (DISHA) குழுக்கூட்டத்தைக் கூட்டி, புதிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளு டன் இணைந்து மதுரையின் நிலுவையில் உள்ள அனைத்து அக, புற உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களையும் விரைவுபடுத்தப் போவதாகக் கூறித் தனது பேட்டியை நிறைவு செய்தார். இந்த ஆய்வின்போது சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா, பகுதிக்குழுச் செயலாளர் பி. கோபிநாத், நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக ஊழியர் ஜெரோம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். (ந.நி.)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.