மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தினசரி நீர்மோர் வழங்கும் திட்டம் துவக்கம்
16 May 2026, 11:25 pm
<p><strong>மதுரை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு தினசரி நீர்மோர் வழங்கும் திட்டம் துவக்கம்</strong></p><p>மதுரை, மே 16– கோடைகால வெயிலின் தாக்கத்தால் அவதிப்படும் ரயில் பயணிகளின் தாகத்தை தீர்க்கும் வகையில், இந்திய ரயில்வே துறை யின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் மதுரை ரயில் நிலையத்தில் தினசரி நீர்மோர் வழங்கும் திட்டம் வெள்ளியன்று தொடங் கப்பட்டது. துவக்க நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலை வர் டாக்டர் என். ஜெகதீசன் தலைமை தாங்கி னார். செயலாளர் எஸ். ஸ்ரீதர், துணைத்தலை வர் ஜெ. செல்வம் மற்றும் மதுரை ரயில்வே தலைமை வணிக ஆய்வாளர் இளனி மணி கண்டன் ஆகியோர் துவக்கி வைத்தனர். கோடைக்காலம் நிறைவடையும் வரை தினமும் மாலை நேரம் வரை சுமார் 2 ஆயி ரம் பயணிகளுக்கு நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரி வித்தனர். மேலும், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த சேவை தொடர்ந்து நடை பெறும் என்றும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.</p>
