30 ஆயிரம் பணியிடங்களை சரண்டர் செய்யும் உத்தரவை ரத்து செய்திடுக! மதுரையில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
13 May 2026, 9:39 pm

30 ஆயிரம் பணியிடங்களை சரண்டர் செய்யும் உத்தரவை ரத்து செய்திடுக! மதுரையில் ரயில்வே ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 13- ரயில்வே துறையில் ஆண்டுதோறும் 2 சதவீத பணியிடங்களை குறைக்கும் ஒன்றிய அரசின் கொள்கை யை கைவிடக் கோரி, மதுரை கோட்டம் தட்சிண ரயில்வே ஊழியர் சங்கம் (டிஆர்இயு) சார்பில் புதன்கிழமை கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.

மதுரை ரயில்வே காலனி யில் உள்ள டிஆர்இயு கூட்ட ரங்கம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏரா ளமான ரயில்வே தொழிலா ளர்கள் கலந்து கொண்டு ஒன் றிய அரசுக்கு எதிராக முழக்க மிட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு டிஆர்இயு கோட்டப் பொரு ளாளர் பி.சரவணன் தலைமை தாங்கினார். மதுரை ஆன் லைன் செயலாளர் பி.சேதுக் கரை முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், ரயில் வேயில் 30 ஆயிரம் பணி யிடங்களை சரண்டர் செய் யும் உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், பதவி சரண்டர் காரணமாக பாதிக்கப்படும் சிஆர்சி பதவி உயர்வுகளை பாதுகாக்க வேண்டும், புதிய பென்சன் திட்டம் மற்றும் ஒருங்கி ணைந்த பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென் சன் திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும், காலியாக உள்ள அனைத்து பணியிடங் களையும் நிரப்ப வேண்டும், ரயில்வேக்கு தனி பட் ஜெட்டை மீண்டும் கொண்டு வர வேண்டும், அனைத்து பிரிவுகளிலும் 8 மணி நேர வேலை முறையை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியு றுத்தப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் டிஆர்இயு கோட்டத் தலை வர் கே.ராஜா, கோட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், சிஐ டியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.லெனின், அனைத்திந்திய நிலைய மேலாளர்கள் சங்க முன் னாள் பொதுச்செயலாளர் பி. ராஜீவ்காந்தி, அனைத்திந் திய லோக்கோ ரன்னிங் ஸ்டாப் சங்க இணைச்செய லாளர் ஏ.ராகவன், அனைத் திந்திய கார்ட்ஸ் கவுன்சில் அமைப்புச் செயலாளர் பி.மருதுபாண்டி, டிஆர்பியு கோட்டச் செயலாளர் ஆர். சங்கரநாராயணன், டிஆர் இயு துணைப் பொதுச் செய லாளர் என்.கார்த்திக் சங்கிலி உள்ளிட்டோர் கண்டன உரை யாற்றினர்.

நிறைவாக டிஆர்இயு கோட்ட உதவிச் செயலாளர் எஸ்.நிஜாமுதீன் நன்றி கூறி னார்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், ரயில்வே துறையில் தண்ட வாளங்கள் 26 சதவீதம், சரக்கு பெட்டிகள் 51 சத வீதம் மற்றும் ரயில் என்ஜின் கள் 74 சதவீதம் அதிகரித் துள்ள நிலையில், தேஜஸ், வந்தே பாரத் உள்ளிட்ட புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப் பட்டதால் வேலைப்பளு மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால், 1990ஆம் ஆண் டில் 16.5 லட்சமாக இருந்த ரயில்வே ஊழியர்களின் எண்ணிக்கை தற்போது 12.29 லட்சமாக குறைக்கப் பட்டிருப்பது தொழிலாளர் கள் மத்தியில் கடும் அதி ருப்தியை ஏற்படுத்தியுள்ள தாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.