மதுரை ரயில்வே கோட்ட வருமானம் ரூ.1408 கோடியாக உயர்வு
9 May 2026, 11:05 pm

மதுரை ரயில்வே கோட்ட வருமானம் ரூ.1408 கோடியாக உயர்வு

மதுரை, மே 9- மதுரை ரயில்வே கோட்டம், 2025–26 நிதி யாண்டில் ரூ.1,408.69 கோடி மொத்த வருமானம் ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளது. இது கடந் தாண்டு பதிவான ரூ.1245 கோடியை விட 13 சத வீதம் அதிகமாகும். மேலும், தெற்கு ரயில்வே நிர்ணயித்திருந்த ரூ.1,340 கோடி வருமான இலக்கை விட 5 சதவீதம் கூடுதலாக வருமானம் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயணிகள் வருமானம் அதிகரிப்பு

மதுரை கோட்டத்தில் பயணச்சீட்டு விற்பனை மூலம் ரூ.886.32 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட ரூ.863.90 கோடி இலக்கை விட 3 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டில் மொத்தம் 4.89 கோடி பயணி கள் மதுரை கோட்ட ரயில்களை பயன்படுத்தியுள்ள னர். இது நிர்ணயிக்கப்பட்ட 4.62 கோடி இலக்கை விட 6 சதவீதம் உயர்வாகும்.

சரக்கு போக்குவரத்திலும் சாதனை

சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.411 கோடி வரு மானம் கிடைத்துள்ளது. இது நிர்ணயிக்கப்பட்ட ரூ.375.05 கோடி இலக்கை விட 10 சதவீதம் அதிகம். மேலும், இலக்கான 3.149 மில்லியன் டன்னைக் காட்டிலும் 3.572 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. முதன்முறையாக தூத்துக்குடி மீளவிட்டானில் இருந்து சரக்கு ரயில் மூலம் கொல்கத்தாவுக்கு மஞ்சள் பட்டாணி அனுப்பப்பட்டு, அதன் மூலம் ரூ.2.75 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

இதர வருமானங்கள்

பார்சல், லக்கேஜ், நடைமேடை சீட்டு மற்றும் பயணச்சீட்டு பரிசோதனை ஆகியவற்றின் மூலம் ரூ.60.65 கோடி வருமானம் கிடைத்துள்ளது. பார்சல் சேவை கணினிமயமாக்கப்பட்ட பிறகு, இதுவரை இல்லாத அளவில் ரூ.10.78 கோடி வரு மானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 97 சதவீத ரயில்களில் பயணச்சீட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சீட்டில்லா பயணிகள் மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து ரூ.12.73 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

வாடகை மற்றும் விளம்பர வருமானம்

உணவகங்கள், வாகன நிறுத்துமிடங்கள், ஓய்வறைகள், விளம்பரங்கள் மற்றும் கழிவு பொருட் கள் விற்பனை உள்ளிட்ட பிரிவுகள் மூலம் ரூ.50.72 கோடி வருமானம் கிடைத்துள்ளது. உணவக வாடகை வருமானம் – ரூ.7.92 கோடி; விளம்பர வருமானம் – ரூ.8.58 கோடி; வாகன நிறுத்துமிட வருமானம் – ரூ.7.45 கோடி; தங்கும் அறை கள் மற்றும் காத்திருப்பு அறைகள் – ரூ.1.79 கோடி கிடைத்துள்ளது. கழிவு பொருட்கள் விற்பனை மூலம் கிடைத்த வருமானம் கடந்த ஆண்டைவிட 16 சதவீதம் உயர்ந்து ரூ.23.60 கோடியாக உயர்ந்துள்ளது என மதுரை கோட்ட தென்னக ரயில்வே நிர்வாகம் தெரி வித்துள்ளது.