2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீர் முகாம்
12 May 2026, 12:00 am
<p><strong>2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய மக்கள் குறைதீர் முகாம்</strong></p><p>மதுரை, மே 11- சட்டமன்ற தேர்தலை முன் னிட்டு கடந்த மார்ச் 15ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடை பெற்று வந்த மக்கள் குறைதீர்ப்பு முகாம்கள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டிருந்தன. இதனால் பொதுமக் கள் தங்களது அடிப்படை பிரச்ச னைகள், பட்டா மாறுதல், சொத்து விவகாரங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் மே 6ஆம் தேதி யுடன் முடிவுற்றதை தொடர்ந்து, சுமார் 2 மாதங்களுக்கு பிறகு திங்கட்கிழமை மீண்டும் மனுநீதி நாள் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் தொடங்கியது. மதுரை மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார் தலைமை யில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமான பொதுமக் கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை நேரில் வழங்கினர். கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி களிடமி ருந்து இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர் உத வித்தொகை, விபத்து நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் தொடர்பான மனுக்கள்பெறப்பட்டன. பொதுமக்களிடமிருந்து மனுக களை நேரில் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், அவற்றின் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.</p>
