திருநர் மக்களின் சமத்துவ உரிமைகளுக்கான பயணத்தில் மார்க்சிஸ்ட் என்றும் தோள் கொடுப்போம்! மதுரை பிரைட் திருவிழாவில் பெ. சண்முகம் முழக்கம்!
23 Jun 2026, 10:00 pm

திருநர் மக்களின் சமத்துவ உரிமைகளுக்கான பயணத்தில் மார்க்சிஸ்ட் என்றும் தோள் கொடுப்போம்! மதுரை பிரைட் திருவிழாவில் பெ. சண்முகம் முழக்கம்!

மதுரை, ஜூன் 23- வரலாற்றின் பக்கங்களிலும் சமூ கத்தின் பார்வைகளிலும் நீண்டகாலமாகப் புறக்கணிக்கப்பட்டு வந்த திருநங்கையர் மற்றும் திருநம்பிகளின் குரல்கள், இன்று எழுத்து வடிவம் பெற்றுத் தங்களின் இருப்பைப் பறைசாற்றத் தொடங்கியுள் ளன. அதன் ஒரு சிறப்புமிக்க நிகழ்வாக, மதுரையில் ‘திருநங்கையர் மற்றும் திருநம்பிகள் ஆவண மையத்தின்’ சார்பில் ‘பிரைட் அண்ட் மதுரை 2026’ என்ற சிறப்புத் திருவிழா கடந்த ஜூன் 20 அன்று நடைபெற்றது.

ஆவண மையத்தின் இயக்குநர் பிரியா பாபு நெறியாள்கையில் ஒருங்கி ணைக்கப்பட்ட இந்த விழாவின் முதன்மை நோக்கமே, திருநங்கையர் மற்றும் திருநம்பிகளின் இலக்கியப் படைப்புகளைச் சமூகத்தின் முதன்மைப் பார்வைக்குக் கொண்டு வந்து அங்கீகரிப்பதுதான். வன்கொடுமைகளுக்கு எதிரான நினைவூட்டல்

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, வாழ்த்துரை வழங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை முதன்மைப் படுத்தி உணர்வுப்பூர்வமாகப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

“1992 ஜூன் மாதம் 20-ஆம் தேதி என்பது வாச்சாத்தியில் ஆதிவாசி மக்களுக்கு எதிராக பெரும் வன்கொடுமை நிகழ்த்தப்பட்ட கருப்புத் தினம். அதே ஜூன் 20-ஆம் தேதியில், ஒடுக்குமுறைக்கு எதிரான நினைவூட்டலாக இந்த பிரைட் நிகழ்வை ஆவண மையம் நடத்தி இருப்பது மிக முக்கியமானது. 1969 ஜூன் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ‘ஸ்டோன்வால் கலகம்’ தான் உலக அளவில் பாலினச் சிறுபான்மையினரின் விடுதலைக்கான முதல் பெருநெருப்பாக மாறியது. இது வெறும் கொண்டாட்டம் அல்ல; ‘நாங்களும் இந்தச் சமூகத்தின் அங்கமே, எங்களை எங்களது அடை யாளத்தோடு வாழவிடு’ என்று சுயமரியாதை யையும் உரிமைகளையும் உரக்கச் சொல்லும் மாபெரும் அரசியல் முழக்க மாகும்.

நாடாளுமன்றத்திலும் களத்திலும் தொடரும் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் பக்கம் நின்று, அவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் இயக்கம். திருநங்கையர், திருநம்பிகள் மற்றும் பிற பாலினச் சிறுபான்மையினரின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய அள விலும் மாநில அளவிலும் தொடர்ந்து பணி யாற்றி வருகிறது.

சமீபத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள திருநர் மசோதா சட்டத்தைக் கண்டித்து, நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மிகக் கார சாரமான வாதங்களை முன்வைத்தார். இந்தச் சட்டத்தில் இருக்கும் குறைபாடு களையும், அது திருநர் மக்களின் சுயமரி யாதையை எப்படிப் பாதிக்கிறது என்பதை யும் நாடாளுமன்றத்தில் அவர் அழுத்த மாகப் பேசினார். இந்த மசோதாவுக்கு எதிராகச் சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாபெரும் போராட்டமும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் சார்பாகக் கண்டனக் கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்த நாட்டின் அனைத்துக் குடிமக்க ளையும் சமமாகவே பார்க்கிறது. எனவே, திருநர் மக்களின் இந்த நியாயமான சமத்துவப் பயணத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் உங்களோடு தோளோடு தோள் நின்று பயணிக்கும்.” இவ்வாறு அவர் பேசினார். 5

நூல்கள் வெளியீடு; சாதனையாளர்க்கு பாராட்டு

பெ. சண்முகத்தின் இந்த எழுச்சியுரையைத் தொடர்ந்து, சமூகம் விதித்த தடைகளையும், தாங்கள் கடந்து வந்த முட்களின் பாதைகளையும் பதிவு செய்யும் வகையில் திருநங்கையர் மற்றும் திருநம்பிகள் எழுதிய ஐந்து நூல்கள் விழாவில் வெளியிடப்பட்டன.

திருநம்பி சக்தி எழுதிய ‘எனக்குள் ஒருவன்’ (சுயசரிதை), திருநங்கை மானு எழுதிய ‘மௌனத்தை மீறி’ (சுயசரிதை), திருநம்பி சிவருத்ரன் எழுதிய கவிதை தொகுப்பு, திருநங்கை ராஜகுமாரி எழுதிய சிறுகதை தொகுப்பு மற்றும் திருநங்கை ரூபா எவாஞ்சலின் கவிதை தொகுப்பு ஆகிய நூல்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு மேடையில் வெளி யிடப்பட்டன. தொடர்ந்து, திருநர் சமூகத்தின் கல்வி மற்றும் வாழ்வாதார முன்னேற்றத் திற்குப் பங்காற்றிய ஆளுமைகளுக்கு ‘மாற்றம் உருவாக்குபவர்களுக்கான விருதுகள்’ வழங்கப்பட்டன.

மேலும், திருநர்கள் நவதானி யங்களால் தயாரித்த ஆரோக்கியமான உணவுப் பொருட்களின் விற்பனை அங்கா டிகள், திருநங்கைகள் பற்றிய வரலாற்று, இலக்கிய ஓவியக் கண்காட்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இத்திருவிழாவை அலங்கரித்தன. இவ்விழாவில் தமுஎகச மாநிலத் துணைச் செயலாளர் பா. ஹேமாவதி, மதுரை மாவட்ட சமூக நல அலுவலர் ஆர். காந்திமதி, ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ திட்டத் தலைவர் சக்திவேல் காளியப்பன் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே. அர்ஜூனன், என். பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பாலா, மாதர் சங்க மத்தியக் குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.