மதுரையில் அஞ்சலகங்களை மூடும் முயற்சியை கைவிட வேண்டும்!
30 May 2026, 10:08 pm

மதுரையில் அஞ்சலகங்களை மூடும் முயற்சியை கைவிட வேண்டும்!

மதுரை, மே 30- மதுரையில் சிறப்பாகவும் லாப கரமாகவும் செயல்பட்டு வரும் ஜெய்ஹிந்த் புரம் மற்றும் ரயில்வே கோட்ட மேலா ளர் அலுவலக வளாக அஞ்ச லகங்களை மூடும் முயற்சியை அஞ்சல் துறை உடனடியாக கைவிட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தமிழ்நாடு அஞ்சல் வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி மற்றும் ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். சேவை அதிகரித்துள்ள நிலையில் மூடுவதா? அந்தக் கடிதத்தில், மதுரை யின் மக்கள் தொகை 22 லட்சத்தை கடந்துள்ள நிலையிலும், கடந்த 20 ஆண்டுகளாக புதிய அஞ்ச லகங்கள் திறக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மக் கள் தொகையும் சேவைத் தேவை களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், புதிய அஞ்ச லகங்களைத் திறப்பதற்குப் பதி லாக ஏற்கனவே செயல்பட்டு வரும் அஞ்சலகங்களை மூட முயற்சிப் பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார். அதிக வைப்புத் தொகை ஈர்த்துள்ளன ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் அஞ்சலகம் வெறும் 2 ஊழி யர்களுடன் செயல்பட்டு வந்தா லும், கடந்த மூன்று மாதங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரி வர்த்தனைகள் மூலம் ரூ.2 கோடிக் கும் அதிகமான வைப்புத் தொகை யை ஈர்த்துள்ளதாக அவர் குறிப் பிட்டுள்ளார். அதேபோல், ஜெய்ஹிந்த் புரம் அஞ்சலகம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொண்டு ரூ.1.5 கோடிக்கும் அதிகமான வர்த்தகத்தை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மக்கள் பயன்பாட்டில் இருந்து வருவாய் ஈட்டும் திறன் கொண்ட இந்த அஞ்சலகங்களை மூடுவ தற்கான நடவடிக்கை பொருத்த மானதாக இருக்காது என்று தனது கடிதத்தில் சு.வெங்கடேசன் சுட்டிக் காட்டியுள்ளார். அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது மேலும், “தற்காலிக இணைப்பு” என்ற பெயரில் அஞ்ச லகங்களை மூடுவது எளிய மக்கள் மற்றும் முதியோர்களின் நிதிச் சேவைகளை பாதிக்கும். குறிப் பாக, ‘நிதிச் சேர்க்கை’ என்ற அடிப் படை நோக்கத்திற்கே எதிரான நட வடிக்கையாக இது அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுமக்கள் மற்றும் அஞ்சல் துறை ஊழியர் சங்கங்க ளின் கோரிக்கைகளை ஏற்று, ஜெய்ஹிந்த்புரம் மற்றும் ரயில்வே டிஆர்எம் அலுவலக வளாக அஞ்ச லகங்கள் தொடர்ந்து அதே இடங்க ளில் செயல்படுவதற்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று ஒன்றிய தகவல் தொடர்புத்துறை அமைச்சரை யும், அஞ்சல் துறை அதிகாரிகளை யும் சு.வெங்கடேசன் எம்.பி. வலி யுறுத்தியுள்ளார்.

மக்கள் நலனுக்கு எதிரானது

சிபிஎம் கண்டனம் மதுரை, மே 30- மதுரையில் பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு சேவையாற்றி வரும் துணை அஞ்சல் நிலை யங்களை “தற்காலிக இணைப்பு” என்ற பெயரில் மூடும் நடவடிக்கை யை உடனடியாக கைவிட வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: ஏற்று கொள்ள முடியாத நடவடிக்கை மதுரை மக்களுடன் நெருக்க மாக இருந்து பல ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி வரும் ஜெய்ஹிந்த்புரம் மற்றும் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாக துணை அஞ்சல் நிலையங் களை மூடுவதற்கான நடவடிக்கை களை தபால் துறை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி யுள்ளன. பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் செயல் பட்டு வரும் இந்த அஞ்சல் நிலை யங்களை மூடுவது ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கையாகும். மக்கள் நலனுக்கு எதிரானது மதுரை மண்டல தபால் துறை நிர்வாகமும், இந்திய தபால் துறை யும் இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். பொதுமக் களுக்கு அருகாமையில் சேவை வழங்குவதுடன், கோடிக்கணக் கான ரூபாய் வைப்புத் தொகை களை ஈர்க்கும் திறன் கொண்ட துணை அஞ்சல் நிலையங்களை மூடுவது மக்களின் நலனுக்கு எதிரான செயலாகும். தற்காலிக இணைப்பு என்று மூடுவதா? ஏற்கனவே மதுரையின் பல முக் கிய பகுதிகளில் செயல்பட்டு வந்த அஞ்சல் அலுவலகங்கள் மூடப்பட் டுள்ளன. மாட்டுத்தாவணி, பெரி யார் பேருந்து நிலையம், டவுன் ஹால் சாலை, தியாகராசர் கல்லூரி பகுதி, சொக்கிகுளம், யானைக்கல், ஆனையூர் ஹவுசிங் போர்டு உள் ளிட்ட பல பகுதிகளில் அஞ்சல் அலுவலகங்கள் செயல்பாட்டிலி ருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது மீண்டும் “தற்காலிக இணைப்பு” என்ற பெயரில் அஞ்சல் நிலையங்களை மூடுவதற்கான முயற்சியில் தபால் துறை ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது. அஞ்சல் துறையை படிப்படியாக தனியார்மயமாக்கும் நோக்கத்து டன் ஒன்றிய அரசு செயல்பட்டு வரு வதாகவும், அதன் விளைவாக பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் சிபிஎம் குற்றம் சாட்டியுள்ளது. புதிய அஞ்சல் நிலையங்களை திறந்திடுக! எனவே, ஜெய்ஹிந்த்புரம் மற்றும் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வளாக துணை அஞ்சல் நிலையங்களை மூடும் நடவடிக்கை யை உடனடியாக கைவிட வேண் டும். மேலும், மதுரையின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப புதிய அஞ்சல் நிலையங்களைத் திறக்க வேண்டும். அஞ்சல் அலுவல கங்களில் காலியாக உள்ள பணி யிடங்களை நிரப்பி, போதுமான பணியாளர்களை நியமித்து சேவை யை மேம்படுத்த வேண்டும் என்று சிபிஎம் வலியுறுத்தியுள்ளது. ஒன்றிய அரசும் தபால் துறை யும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு இத்தகைய முடிவுகளை மறுபரிசீலனை செய்து, அஞ்சல் சேவைகளை வலுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.