தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விபத்தில் சிக்கிய இளைஞர் தள்ளுவண்டியிலேயே வசிக்கும் அவலம்

25 May 2026, 10:41 pm
விபத்தில் சிக்கிய இளைஞர் தள்ளுவண்டியிலேயே வசிக்கும் அவலம்

விபத்தில் சிக்கிய இளைஞர் தள்ளுவண்டியிலேயே வசிக்கும் அவலம்

மதுரை, மே 25- விபத்தில் சிக்கி இரு கை களும், இரு கால்களும் செய லிழந்த நிலையில் வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவர், தங்குவதற்கு பாதுகாப்பான வீடின்றி தள்ளுவண்டியி லேயே பராமரிக்கப்பட்டு வரும் சம்பவம் மதுரை மாவட்டத் தில் பரிதாபத்தை ஏற்படுத்தி யுள்ளது. மதுரை மாவட்டம் வாடிப் பட்டி அருகே அய்யங் கோட்டை பகுதியைச் சேர்ந்த சி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (27). தாய், தந்தையை இழந்த அவர், ஓட்டுநராக பணியாற்றி வந் துள்ளார். கடந்த ஜனவரி மாதம் அய்யங்கோட்டை பகு தியில் இருசக்கர வாகனத் தில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ராஜா படுகாயம டைந்தார். இதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் மூன்று மாதங்க ளுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு பல்வேறு அறுவை சிகிச்சை கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பி னும், சிகிச்சைக்குப் பின்னர் அவரது இரு கைகளும், இரு கால்களும் செயலிழந்ததால் முழுமையாக பிறரை சார்ந்த வாழ்க்கைக்கு தள்ளப்பட் டுள்ளார். இந்நிலையில், ராஜா வை அவரது உறவினர் சண் முகம் பராமரித்து வருகிறார். ஆனால், அவர்களுக்குச் சொந்தமான வீடு முற்றிலும் இடிந்து சேதமடைந்த நிலை யில் இருப்பதால் அங்கு தங்க முடியாத சூழல் ஏற் பட்டுள்ளது. வீடு சுற்றிலும் புதர்கள் மண்டியுள்ளதுடன், விஷ ஜந்துக்கள் நடமாடு வதால் மாற்றுத்திறனாளி யான ராஜாவை அங்கு வைத்திருக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால், கடந்த ஒரு மாதமாக ராஜாவை தள்ளு வண்டியில் படுக்கவைத்து தெருவோரங்களில் வைத்து சண்முகம் பராமரித்து வரு கிறார். சைக்கிளுடன் இணைக்கப்பட்ட தள்ளு வண்டியின் மேல் போர்வை யால் மூடப்பட்ட நிலையில் ராஜா அசைவின்றி படுத்தி ருப்பதும், அருகில் குளிர் பான பொருட்கள் மற்றும் ஐஸ் பெட்டிகள் வைக்கப்பட் டிருப்பதும் அப்பகுதி மக்க ளிடையே சோகத்தை ஏற் படுத்தியுள்ளது. திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த சண்முகம் கூறுகை யில், “ராஜாவுக்கு அரசு புதிய வீடு கட்டித் தரவோ அல்லது பழைய வீட்டை சீரமைக்க உதவியளிக்கவோ வேண் டும். மேலும் வாழ்வாதா ரத்திற்காக சிறிய பெட்டிக் கடை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உதவி செய்ய வேண் டும்” என கோரிக்கை விடுத் தார். ராஜாவும் தனக்கு மருத்துவ உதவி மற்றும் வீட்டு வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து நேரில் விசாரணை நடத்திய மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர், ராஜாவுக்கு மாற்றுத்திறனாளர் அடை யாள அட்டை வழங்கப்பட்டு மாதந்தோறும் ரூ.3,000 உத வித்தொகை வழங்க நட வடிக்கை எடுக்கப்படும் என் றும், அவரது சொந்த ஊரான சி.புதூரில் வீடு கட்டித் தர பரிந்துரை செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.