1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தையே தொடர வேண்டும் மதுரையில் சிறுபான்மை மக்கள் நலக் குழு ஆர்ப்பாட்டம்
23 May 2026, 10:32 pm

1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தையே தொடர வேண்டும் மதுரையில் சிறுபான்மை மக்கள் நலக் குழு ஆர்ப்பாட்டம்

மதுரை, மே 23- தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழு சார்பில், 1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்தையே முழுமையாக தொடர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடலில் சனிக்கிழமை மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஸ்டீபன், சப்னம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தலைவர்கள், “1991 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் சட்டம், நாட்டின் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் பாதுகாக்கும் முக்கியமான சட்டமாகும்.

1947 ஆகஸ்ட் 15 அன்று எந்த வழிபாட்டுத் தலம் எந்த மதத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததோ, அதே நிலை தொடர வேண்டும் என்பதே இந்தச் சட்டத்தின் அடிப்படை நோக்கம்.

இந்தச் சட்டத்தை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியும் நாட்டின் அமைதிக்கும் ஜன நாயகத்திற்கும் ஆபத்தாக அமையும்” என்று தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், பொறுப்பு மேயர் தி.நாகராஜன், முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் சேக், தமுமுக தெற்கு மாவட்டத் தலைவர் எஸ்.

சேக் இப்ராஹிம், மாநில குழு உறுப்பி னர் பெனடிக் பர்னபாஸ், பல் சமய உரை யாடல் குழு செயலாளர் பால் பிரிட்டோ, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரமேஷ், அமைப்பின் மாவட்டச் செயலா ளர் என்.கணேசமூர்த்தி மற்றும் மாவட்ட பொருளாளர் எம்.ஜான்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

மாவட்ட துணைச் செயலாளர் டி.ஜான் மைக்கேல் நன்றி கூறினார்.