தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
15 Jun 2026, 10:57 pm
<p><strong>தனியார் கல்குவாரிக்கு எதிர்ப்பு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்</strong></p><p>மதுரை, ஜூன் 15- மதுரை மாவட்டம் மேலூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரி யால் நீர்நிலைகள் மற்றும் குடிநீர் வசதிகள் பாதிக்கப் படுவதாக குற்றம்சாட்டி, பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். மேலூர் அருகே கச்சிரா யன்பட்டி ஊராட்சிக்கு உட் பட்ட கோ.புதூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல் குவாரியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கற்களின் கழி வுகள், அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைந்த பகுதி களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி னர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வும் அவர்கள் தெரிவித்தனர். இதைக் கண்டித்து, அப் பகுதியைச் சேர்ந்த பெண் கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சாலையில் கற்களை கொட்டி, காலிக் குடங்களுடன் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். மேலும், குவாரி பகுதி யில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெடி வைத்து கற்கள் வெட்டப்படுவதால் எப்போது வேண்டுமானா லும் விபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும், கற்களை ஏற்றிச் செல்லும் லாரிகளால் காவிரி கூட்டுக் குடிநீர் திட் டக் குழாய்கள் உள்ளிட்ட குடிநீர் குழாய்கள் சேதம டைந்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் தெரி வித்தனர். இதுகுறித்து குவாரி நிர்வாகத்திடம் முறையிட் டால் மிரட்டல் விடுப்பதாக வும் அவர்கள் குற்றம்சாட்டி னர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொட் டாம்பட்டி காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். தொட ர்ந்து மேலூர் வட்டாட்சியர் முத்துபாண்டி மற்றும் மேலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் சிவ குமார் ஆகியோர் நேரில் சென்று போராட்டக்காரர் களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக் கைகள் குறித்து உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த தைத் தொடர்ந்து, போரா ட்டத்தை கைவிட்டு பொது மக்கள் அங்கிருந்து கலை ந்து சென்றனர். தனியார் கல்குவாரிக்கு எதிராக மூன்று மணி நேரத் திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சாலை மறியல் போரா ட்டத்தால் அப்பகுதியில் பர பரப்பான சூழல் நிலவியது.</p>
