தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போலி ஆவணங்கள் மூலம் மேலக்குயில்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டுமனைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

7 Aug 2026, 10:56 pm
போலி ஆவணங்கள் மூலம் மேலக்குயில்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டுமனைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி  போராட்டம்

போலி ஆவணங்கள் மூலம் மேலக்குயில்குடியில்

மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வீட்டுமனைகளை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை கோரி போராட்டம்

மதுரை, ஆக.7-மதுரை மேற்கு தாலுகா மேலக்குயில்குடியில் தமிழக அரசால் 27 மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டஇலவச வீட்டு மனை பட்டாக்களை போலி பட்டா மூலம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கும் நபர்கள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் வெள்ளிக்கிழமையன்று மேற்கு தாலுகா அலுவலகம் முன்புபோராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாநில உதவித் தலைவர் கே. தவமணி தலைமை வகித்தார். மாவட்ட உதவித்தலைவர் கே. பரமசிவன், மாவட்டக்குழு உறுப்பினர் பி. ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் ஒன்றியச் செயலாளர் எம். ஜெயக்குமார் போராட்டத்தை துவக்கிவைத்து உரையாற்றினார்.

சங்கத்தின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஏ. பாலமுருகன் பேசுகையில், பட்டா ஆக்கிரமிப்பு தொடர்பாககாவல்துறையில் புகார்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கை தாமதமானது. இந்த போராட்டத்தால் தற்போதுசம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நகலும் சங்கத்திடம்வழங்கப்பட்டுள்ளது. பார்வை மாற்றுத்திறனாளி சின்னக்கண்ணு தனது வீட்டிற்குள் குடியேற வேண்டும்;ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடத்தை எப்போது அகற்றுவது என்பது குறித்து எழுத்துப்பூர்வமான உத்தரவு வழங்கவேண்டும்; ஆகஸ்ட் 11 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற உள்ளது. அந்தவிசாரணையில் அரசு வழங்கிய அசல் பட்டாவை சங்கத்தின் சார்பில் சமர்ப்பித்து, பட்டாவின்உண்மைத்தன்மை குறித்து உரிய முடிவு எடுக்க வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ.லெனின் பேசுகையில், இன்றைய பேச்சுவார்த்தையில்மாற்றுத்திறனாளிகளிடம் உள்ள அரசு வழங்கிய பட்டாவே உண்மையான பட்டா என்றும், மற்றொரு தரப்பினர்சமர்ப்பித்த பட்டா போலியானது என்றும் நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குடும்பங்கள் தங்களுக்காக அரசு வழங்கிய வீட்டு மனைகளில்குடியேறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கும் மேலாக மாற்றுத்திறனாளி குடும்பங்கள்தங்களுடைய உரிமைக்காக போராடி வருகின்றனர். தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றுகூறினார்.

நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதிபேச்சுவார்த்தையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று,சங்கத்தின் கோரிக்கைகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம்தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. போராட்டத்தில் மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் புறநகர் மாவட்டச்செயலாளர் வி. முருகன், மாவட்ட உதவித் தலைவர் வி. மாரியப்பன், மாநகர் மாவட்டப் பொருளாளர் பி.மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் எஸ். ராமலிங்கம், எஸ். செல்லம்மாள், ஆர். ஜெயா, புறநகர் மாவட்டப்பொருளாளர் எம். ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.