தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா தமிழுக்கு இணை முக்கியத்துவம் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

3 Jun 2026, 10:03 pm
மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா தமிழுக்கு இணை முக்கியத்துவம் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
<p><strong>மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா தமிழுக்கு இணை முக்கியத்துவம் கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு</strong></p><p>மதுரை, ஜூன் 3- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில் சமஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழ் மொழியையும் பயன்படுத்த உத்த ரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை, அரசு மற்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதைத் தொடர்ந்து, உயர்நீதி மன்ற மதுரை கிளை ஒத்திவைத் துள்ளது. கரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு வில், தமிழகத்தில் உள்ள கோவில் களில் குடமுழுக்கு விழாக்கள் நடை பெறும் போது சமஸ்கிருத மொழி யுடன் தமிழ் மொழியும் பயன்படுத்தப் பட வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்க னவே பல்வேறு வழக்குகளில் உத்தர விட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், சில கோவில்களில் சமஸ் கிருத மொழி மட்டுமே பயன்படுத்தப்படு வதாகக் கூறிய அவர், இந்து சமய அறநிலையத் துறையால் நியமிக்கப் பட்ட குடமுழுக்கு தொடர்பான உயர் மட்டக் குழுவின் அறிக்கையை பெற்று, தமிழகத்தின் அனைத்து கோவில்களி லும் சமஸ்கிருதத்திற்கு இணை யாக தமிழ் மந்திரங்களும் பயன் படுத்தப்படுவதை உறுதி செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். குறிப்பாக, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில், சமஸ்கிருதத்திற்கு இணை யாக தமிழ் மொழிக்கும் உரிய முக்கி யத்துவம் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு ஏற்கனவே விசார ணைக்கு வந்தபோது, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அமைந் துள்ள உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடை பெறும் குடமுழுக்கு விழாவில், பிற கோவில்களைவிட தமிழுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என நீதிபதி பரத சக்கரவர்த்தி கருத்து தெரிவித்திருந்தார். மேலும், கோவில் குடமுழுக்கு தொடர்பாக உயர்நீதி மன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு கள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளன என்பது குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், வழக்கு புதன் கிழமை மீண்டும் நீதிபதி பரத சக்கர வர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு மற்றும் கோவில் நிர்வா கம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசார ணையை ஒத்திவைத்து உத்தரவிட்ட நீதிபதி, இவ்வழக்கில் வழங்கப்படும் இறுதி உத்தரவு தமிழில் பிறப்பிக்கப் படும் என்றும் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.