தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கும்பாபிஷேக இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் வர்ணப் பூச்சுகளால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மீனாட்சி கோவில் கோபுரங்கள்

31 May 2026, 10:10 pm
கும்பாபிஷேக இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் வர்ணப் பூச்சுகளால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மீனாட்சி கோவில் கோபுரங்கள்

கும்பாபிஷேக இறுதிக்கட்ட பணிகள் தீவிரம் வர்ணப் பூச்சுகளால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் மீனாட்சி கோவில் கோபுரங்கள்

மதுரை, மே 31- உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவிலில் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இறுதிக்கட்ட திருப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரு கின்றன.

இக்கோவிலில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள தால், கோவில் முழுவதும் சீரமைப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரவசந்தராயர் மண்டபம், அதன் பழமை மாறாமல் பாதுகாக்கும் வகையில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

மேலும், கோவிலில் உள்ள கோபுரங்கள் மற்றும் தூண்களுக்கு புதிய வர்ணப் பூச்சுகள் பூசப்பட்டு வருகின்றன.

கோவிலில் உள்ள சுமார் 33 ஆயிரம் சிற்பங்களுக்கும் விதிமுறைகளுக்கு உட் பட்டு எண்ணெய் பூச்சு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோல், கம்பத்தடி மண்டபம், ஆயிரங்கால் மண்ட பம் மற்றும் புது மண்டபம் உள்ளிட்ட பகுதி களில் சிவமகாபுராணம், திருவிளையாடல் புராணம் மற்றும் இதிகாச நிகழ்வுகளை சித்தரிக்கும் ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு வருகின்றன.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு ராஜகோபுரங்களுடன் ஐந்து சிறிய கோபுரங்கள், அம்மன் சன்னதியில் உள்ள மூன்று சிறிய கோபுரங்கள் மற்றும் சுவாமி, அம்மன் சன்னதிகளின் தங்க விமானங்க ளுக்கும் வர்ணப் பூச்சு பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

இதனால் கோவில் வளாகம் முழுவதும் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

செப்டம்பர் 17 ஆம் தேதி நடைபெற வுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவிலின் அழ கிய தோற்றம் பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.