தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ.60 கோடி கட்டளை சொத்து அபகரிப்பு முயற்சி

3 hours before
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்  ரூ.60 கோடி கட்டளை சொத்து அபகரிப்பு முயற்சி
<p><strong>மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரூ.60 கோடி கட்டளை சொத்து அபகரிப்பு முயற்சி</strong></p><p>மதுரை, ஜூலை 28 - மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள கட்டளை சொத்தை சட்டவிரோதமாக அபகரிக்க முயன்றதாக முன்னாள் தாசில்தார், சார் பதிவாளர்கள் உள்பட 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு அரசர்களும் ஜமீன்தார் களும் நிலங்களையும் அறக்கட்டளை சொத்துகளையும் தானமாக வழங்கி யுள்ளனர். அவற்றில் புதுக்கோட்டை துரைராணி ஏற்படுத்திய கட்டளை 1930 ஆம் ஆண்டு உயில் சாசனமாகப் பதிவு செய்யப்பட்டது. தல்லாகுளம் அழகர்கோவில் சாலையில் உள்ள அசோகா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம் ஆகியவை கோவில் சேவைகளுக் காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்ட ளைக்குச் சொந்தமானதாகும். இந்தச் சொத்தை வாடகைக்கு விட மட்டுமே அனுமதி உண்டு என்றும், விற்பனை, அடமானம் அல்லது உரிமை மாற்றம் செய்யக் கூடாது என்றும் உயில் சாசனத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு மதுரை வடக்கு வட்டத்தின் முன்னாள் தாசில்தார் அன்பழகன், கோவிலின் பெயரை நீக்கி தனிநபர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்த தாகப் புகார் எழுந்தது. வருவாய்த் துறை விசாரணையால் அந்த உத்த ரவு ரத்து செய்யப்பட்டாலும், உயர் நீதிமன்றத் தடை உத்தரவு அமலில் இருந்த போதும், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சார் பதிவாளர் அலுவலகங்களில் பொது அதிகார ஆவணம் மற்றும் அடமானப் பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத் துறை யின் அறிவுறுத்தலின் பேரில், கோவில் இணை ஆணையர் செல்லத் துரை அளித்த புகாரின் அடிப்படை யில், முறைகேடுகளில் ஈடுபட்ட முன்னாள் தாசில்தார், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர், சார் பதி வாளர்கள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்ட 19 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.