மீனாட்சி அம்மன் கோவில் சொத்துகள் மீட்பு, குடமுழுக்கு தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்திடுக!
11 Jun 2026, 9:39 pm
<p><strong>மீனாட்சி அம்மன் கோவில் சொத்துகள் மீட்பு, குடமுழுக்கு தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்திடுக!</strong></p><p>மதுரை, ஜூன். 11- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களுக்கு சொந்த மான சொத்துகளை மீட்டு பாதுகாக்கவும், கோவிலை புனரமைத்து விரைவாக குட முழுக்கு நடத்தவும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், அரசுத் தரப்பு தெரிவித்த விவரங்களை விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த மனுவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனுடன் தொடர்புடைய உபகோ வில்களின் சொத்துகளை முறையாக மீட்டு பராமரிப்பதுடன், கோவில் புனர மைப்புப் பணிகளை விரைவுபடுத்தி குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாவட்ட வாரியாக கூட்டங் கள் நடத்தப்பட்டு வருவதாகவும், ஆக்கிர மிப்புகள் தொடர்பாக கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரி வித்தார். கோவில் நிலங்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள தாகவும் கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதி பதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் ஆகியோர், அரசுத் தரப்பு தெரிவித்த விவரங்களை விரிவான பதில் மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர். </p>
