இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு
16 Sept 2026, 9:05 pm
<p><strong>இன்று மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு</strong></p><p>மதுரை, செப். 16 -மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் (அங்கயற்கண்ணி உடனுறை சொக்கநாத பெருமான்) திருக்கோயில் குடமுழுக்கு விழா, இன்று (செப். 17) நடைபெறுகிறது. அதிகாலை 4 மணி முதல் 5.45 மணி வரை 12-ஆம் கால யாக வேள்வி நடைபெறும். அதை தொடர்ந்து கலசங்கள் புறப்பாடாகி, காலை 7.40 மணியளவில் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேசுவரர் சந்நிதிகளின் தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுர கலசங்களுக்கு ஒரே நேரத்தில் குடமுழுக்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து காலை 7.55 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், 8.10 மணிக்கு மூலவர் சுந்தரேசுவரர் சுவாமிக்கும் குடமுழுக்கு நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பின் நடை</p><p>பெறும் இந்த குடமுழுக்கையொட்டி, மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. </p>
