தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழைத் தள்ளி வைப்பதா?

10 Sept 2026, 9:16 pm
தமிழைத் தள்ளி வைப்பதா?

தமிழைத் தள்ளி வைப்பதா?

மதுரை மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் ஆலய குடமுழுக்கு விழா இம்மாதம் 17ஆம் தேதிநடைபெறவுள்ளது. மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு தமிழிலும் நடைபெறுவதை, சமஸ்கிருதத்திற்கு நிகராக அனைத்து நிகழ்வுகளிலும் தமிழுக்கும் சம அந்தஸ்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு இந்து சமய அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உண்டு.

மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு தமிழலும் நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தள்ளுபடி செய்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. குடமுழுக்கின்போது, தமிழ் ஓதுவார்கள், பன்னிரு திருமுறைகள் பாட பிரத்தியேகமாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் தமிழ் திருமுறைகள் தனியாக பாடப்படும். ஆனால் குடமுழுக்குதொடர்பான சடங்குகளில் சமஸ்கிருதம் மட்டுமே இடம்பெறும் என்பதாக புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.

2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தஞ்சை பெரிய கோவிலிலும், 2023ஆம் ஆண்டுபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலும், 2026ஆம் ஆண்டு கரூர் கல்யாண வெங்கடரமணசுவாமி கோவிலிலும் நடந்த குடமுழுக்கு விழாக்கள் சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும்நடத்தப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் இதை அங்கீகரித்துள்ளன. இந்து சமய அறநிலையத்துறை தமிழுக்கும் குடமுழுக்கு விழாவில் சம இடம் தரப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்துசமய அறநிலையத்துறை நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நடைமுறை குடமுழுக்கில் பின்பற்றப்படும் என்றும், குடமுழுக்கு காரண, காரிய ஆகம விதிகளின் அடிப்படையில் நடத்தப்படும் என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சியம்மன் ஆலயத்தில் தமிழ் அர்ச்சனைமுறை சேவை பட்டியலிடப்பட்டு நடைமுறையில் உள்ளது. ஆகம விதிகளின்படி தமிழில் வழிபாடு கூடாது என்று கூறப்படவில்லை என்றுசைவ ஆகம அறிஞர்கள் தெரிவுபடுத்துகின்றனர். எனவே காரண, காரிய, ஆகம விதி என்று கூறி சமஸ்கிருதத்தை மட்டும் முதன்மைப்படுத்திதமிழை தள்ளி வைப்பதை ஏற்க முடியாது.

சுந்தரர் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்” என்று ஞான சம்பந்தரை குறிப்பிடுகிறார். சம்பந்தரின் அடியார்களால் உருவாக்கப்பட்ட மதுரை மடத்திற்கு மரபுரிமையானகோவிலாக விளங்கும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழிலும் குடமுழுக்கு நடத்த மறுப்பது தமிழ் சைவ மரபிற்கு முற்றிலும் முரணானதுஆகும். தமிழில் மட்டுமே குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று கூட பக்தர்கள் தற்போது கோரிக்கைவைக்கவில்லை. தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்றே கோருகின்றனர். என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.