தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரஷ்ய முகாமில் சிறைப்பட்ட மதுரை மருத்துவ மாணவி மீட்பு சு.வெங்கடேசன் எம்.பி.யின் இடைவிடாத தலையீட்டால் தாயகம் திரும்புகிறார்

1 Nov 2026, 10:23 pm
ரஷ்ய முகாமில் சிறைப்பட்ட மதுரை மருத்துவ மாணவி மீட்பு சு.வெங்கடேசன் எம்.பி.யின் இடைவிடாத தலையீட்டால் தாயகம் திரும்புகிறார்

ரஷ்ய முகாமில் சிறைப்பட்ட மதுரை மருத்துவ மாணவி மீட்பு சு.வெங்கடேசன் எம்.பி.யின் இடைவிடாத தலையீட்டால் தாயகம் திரும்புகிறார்

மதுரை, நவ.1-ரஷ்யாவில் போர்ப் பதற்றத்தால் வான் வெளி முடக்கப்பட்டு விமானம் ரத்தானதால் தாயகம் திரும்ப முடியாமல், விசா விதிமீறல் குற்றச்சாட்டில் கைது செய் யப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் முகாமில் அடைக்கப்பட்டிருந்த மதுரை மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், மதுரை நாடாளுமன்றஉறுப்பினர் சு. வெங்கடேசனின் போர்க் கால அடிப்படையிலான தீவிரத் தலையீட்டால் மீட்கப்பட்டு, ஞாயிறன்று (நவ.1) காலை இந்தியா திரும்ப விமானம் ஏறினார்.

விமானம் ரத்து; கைது

மதுரையைச் சேர்ந்த டெய்சி ஆஷா மோரேஸ், ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் நகரில் உள்ள தெற்கு உரால் மாநில மருத் துவப் பல்கலைக்கழகத்தில் (SUSMU) நான்காம் ஆண்டு எம்பிபிஎஸ் பயின்று வருகிறார். அவரது தற்காலிக விசாஅக் டோபர் 18 அன்று முடிவடைய இருந்தது. ரஷ்ய விதிகளின்படி அதற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்என்பதால், முன்கூட்டியே திட்டமிட்டு அக்டோபர் 16 அன்றே செல்யாபின்ஸ்க்கிலிருந்து மாஸ்கோ வழியாகஇந்தியா திரும்பப் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தார்.

ஆனால், திடீர் போர்ப் பதற்றம் மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல் காரணமாக வான் வெளி மூடப்பட்டதால், அன்று செல்யாபின்ஸ்க், எக்கத்தரின்பர்க் நகரங்களிலிருந்து மாஸ்கோ செல்லவிருந்த அனைத்து விமானங்களும் திடீரென ரத்து செய்யப்பட்டன. செய்வதறியாது தவித்த மாணவி, பல்கலைக்கழக நிர்வாகத்தின் நேரடி வழிகாட்டுதலின்படி எக்கத் தரின்பர்க் வழியாக மாற்றுப் பயணச்சீட்டு பதிவு செய்தார். பின்னர், தான் சிக்கியிருக்கும் இக்கட்டான சூழலை விளக்கித் தீர்வுகாண உள்ளூர் குடியேற்ற அலுவலகத்தை அவர் அணுகினார்.

எனினும், மாணவியின் சூழலைப் புரிந்துகொள்ளாத ரஷ்யக் குடியேற்ற அதிகாரிகள், அவர் சட்டவிரோதமாகத் தங்கியதாகவும் விசா விதிகளை மீறியதாகவும் குற்றம்சாட்டினர். விமான நிறுவனத்தின் அடுத்த அறிவிப்புக்குக் காத்திருக்காமல் பயணச்சீட்டை ரத்து செய்ததையும், வேறு விமான நிலையத்திலிருந்து புறப்பட நகரை விட்டு வெளியேறியதையும் குற்றமாகக் கருதி, அக்டோபர் 20 அன்று அவரைக் கைது செய்தனர். மறுநாள் ரஷ்ய நீதிமன்றம் அவருக்கு 90 நாள் தடுப்புக் காவல் விதித்ததையடுத்து அவர் முகாமில் அடைக்கப்பட்டார்.

நீரிழிவு நோயாளியான மாணவிக்கு முறையான உணவும் இன்சுலின் உள் ளிட்ட மருந்துகளும் இன்றியமையாதவை. ஆனால், காவலில் அவருக்குத் தகுந்த உணவோ அத்தியாவசிய மருந்துகளோ கிடைக்காததால், ரத்தச் சர்க்கரை அளவு அபாயகரமாகச் சரிந்து, உயிருக்கே ஆபத்தான சூழல் உருவானது.

எம்.பி.யின் அவசரத் தலையீடு

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய 10 நாள் அவகாசமே இருந்த நிலையில், மாணவியின் தந்தை அருள் மோரேஸ், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கி உதவி கோரினார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து சிறிதும் தாமதிக்காமல், ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமைச்சகச் செயலாளர்களைத் தொடர்புகொண்ட அவர், விரிவான அவசரக் கடிதத்தையும் மின் னஞ்சலில் அனுப்பினார். அதில் பின்வரும்கோரிக்கைகளை அவர் மிகக் கடுமையாக வலியுறுத்தினார்:

• தீவிர நீரிழிவு நோயாளியான மாணவிக்கு முகாமிலேயே உடனடியாகச் சிறப்பு மருத்துவப் பரிசோதனையும் அவசர இன்சுலினும் வழங்கப்படவேண்டும்.

• இந்தியத் தூதரக அதிகாரிகள் மாணவியை உடனடியாக நேரில் சந்திக்க அனுமதி பெறுவதுடன், மேல்முறையீட்டுக் காலம் முடியும் அக்டோபர் 31-க்குள் அவருக்குத் தேவையான சட்ட உதவி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

• விசா காலம் கடந்தது உள்நோக்கமற் றது; மாணவியின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட போர்ச் சூழலும் விமான ரத்துமே காரணம். எனவே, மனிதாபிமான அடிப்படையில் அவரை உடனே இந்தியா அனுப்ப வேண்டும்.வெளியுறவு அமைச்சகம், இந்திய மற் றும்ரஷ்யத் தூதரகங்களுக்கு மின்னஞ் சல் மூலமும், அமைச்சர் மற்றும் செயலாளர் அரூப்குமார் சின்ஹாவிடம் தொலைபேசி மூலமும் அவர் இடைவிடாமல் தொடர் அழுத்தம் கொடுத்தார்.

தூதரகங்கள் நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினரின் அவசரக் கடிதம் மற்றும் தொடர் அழுத்தத்தையடுத்து, வெளியுறவு அமைச்சர் அலுவலகம் உடனடியாகச் செயல்படத் தொடங்கியது. கசான், எக்கத்தரின்பர்க் நகரங்களில் உள்ள இந்தியத் துணைத்தூதரகங்கள், ரஷ்யக் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சகத்துக்கும் பிராந் திய மனித உரிமைகள்ஆணையருக்கும் அதிகாரப்பூர்வத் தூதரகக் குறிப்புகளை (Notes Verbales) அனுப்பித் தீவிர அழுத் தம் கொடுத்தன. அக்டோபர் 27 அன்று இந்திய அதிகாரிகள் ரஷ்ய வெளியுறவு அமைச்சகப் பிரதிநிதிகளை நேரில்சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். வான்வெளி மூடப்பட்டதற்கான ஆதாரங்களை முன்வைத்த அவர்கள், மாணவியின் உயிரைக் காக்க அவரை விரைந்து இந்தியா அனுப்ப வலியுறுத்தினர்.

நவ.15 என்பது நவ.1 ஆனது

சட்ட நடைமுறைகள் முடிந்து மாணவியை அனுப்ப நவம்பர் 15-க்கு மேல் ஆகும் என ரஷ்ய அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். ஆனால், ஒன்றிய அரசு அதிகாரிகளைத் தொலைபேசியில் தொடர்ந்து அழைத்து, மேற்கொள்ளப்பட்டு வந்த ஒவ்வொரு நடவடிக்கையையும்கண்காணித்து சு. வெங்கடேசன் விரைவுபடுத்தியதால், ரஷ்ய அதிகாரிகள் விதிவிலக்கு அளித்து நடைமுறைகளைத் துரிதப் படுத்தினர். அதன்படி, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மாணவி டெய்சி, ஞாயிறன்று காலை எக்கத்தரின்பர்க்கிலிருந்து இந்தியா திரும்ப விமானம் ஏறினார்.

“பெரும் மனநிறைவு”

இதுகுறித்து சு. வெங்கடேசன் கூறுகையில், “நமது நாட்டின் மகளான டெய்சியின் உடல்நலமும் பாதுகாப்பும் மிக முக்கியமானவை. வான்வெளி முடக்கம், விமான ரத்து என எவரது கட்டுப்பாட்டிலும் இல்லாத போர்ச் சூழலால் ஏற்பட்ட இந்தத் துயரத்தில், அவருக்கு இன்சுலின் கிடைக்காதது பெரும் கவலையளித்தது. வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், எக்கத்தரின்பர்க், கசான் தூதரக அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து போர்க் கால அடிப்படையில் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு முழுப் பலன் கிடைத்துள்ளது. கடந்த ஞாயிறு மாலை மாணவியின் தந்தை உதவி கோரினார்; இந்த ஞாயிறு காலை மாணவி விடுவிக்கப்பட்டு விமானம் ஏறிவிட்டார் என்பதுபெரும் மனநிறைவைத் தருகிறது. உடனடி ஒத்துழைப்பு நல்கிய வெளியுறவுத்துறை அமைச்சர், அமைச்சக மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு நன்றி. இந்த ஆறு நாட்களாக வெளியுறவுத்துறை, தூதரக அதிகாரிகள் மற்றும் மாணவியின் பெற்றோரிடம் இடைவிடாமல் பேசி, பணிகளை ஒருங்கிணைத்த மதுரை, தில்லி அலுவலகப் பணியாளர் களின் செயல்பாடு அளப்பரியது. இச் செய்தி மாணவியின் குடும்பத்தினருக்கும் மதுரைக்கும் பெரும் நிம்மதியை அளித் துள்ளது. இந்த மகிழ்ச்சியை அனைவரிடமும் பகிர்ந்துகொள்கிறேன்” என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.