கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பு மதுரை மேயர் தி.நாகராஜன் நேரடி ஆய்வு
25 Feb 2026, 3:22 pm
<p><strong>கூடலழகர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பு மதுரை மேயர் தி.நாகராஜன் நேரடி ஆய்வு</strong></p>
<p>பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் மதுரை, பிப்.25- மதுரை நகரின் வரலாற்று மற்றும் ஆன் மீக அடையாளங்களில் ஒன்றான டவுன் ஹால் ரோடு பகுதியில் அமைந்துள்ள கூடலழ கர் பெருமாள் கோவில் தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் (பொ) தி. நாகராஜன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோவிலுக்கு சொந்தமான இந்த தெப் பக்குளம், மதுரையின் கலாச்சார பாரம்பரி யச் சின்னமாக மட்டுமல்லாது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக் கிய நீர்நிலையாகவும் உள்ளது. அருகிலுள்ள பகுதிகளில் இருந்து கழிவுநீர் தெப்பக்குளத் தில் சேர்வதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மேயர் திடீர் ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்போது கழிவுநீர் கலக்கும் இடங்களை அதிகாரிகளுடன் சேர்ந்து பார்வையிட்ட மேயர், உடனடி தடுப்பு நட வடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தர விட்டார். குறிப்பாக, கழிவுநீர் புகும் பாதை களை முழுமையாக அடைக்க வேண்டும். நிரந்தர வடிகால் அமைத்து சீரமைக்க வேண் டும். தெப்பக்குளம் சுற்றுப்பகுதியில் சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவு படுத்த வேண்டும். நீர்த் தரத்தை பரிசோதி த்து மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற் கொள்ள வேண்டும் போன்ற பணிகளில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினார். மேலும், தெப்பக்குளத்தை வரலாற்று மரபுச் சின்னமாக பாதுகாக்கும் வகையில் நீண்டகால பராமரிப்பு திட்டம் ஒன்றை தயா ரிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார். “நகரின் பாரம்பரிய நீர்நிலை கள் பாதுகாக்கப்படுவது சுற்றுச்சூழல் சமநிலைக்கும் பொதுச் சுகாதாரத்திற்கும் அவசியம். எந்தவித கழிவுநீரும் தெப்பக் குளத்தில் கலக்க அனுமதிக்கப்படமாட் டாது” என்று அவர் தெரிவித்தார். தெப்பக்குளத்தை சுற்றி பேவர் பிளாக் கற்கள் பதித்தல், பொதுமக்கள் அமர்வதற் கான இருக்கைகள் அமைத்தல், கைப்பிடி சுவர்கள் அமைத்தல், நான்கு பக்கங்களி லும் உயர்மின் கோபுர விளக்குகள் நிறுவு தல் போன்ற பணிகளுக்கும் திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், வைகை ஆறு மூலம் தெப்பக்குளத்திற்கு நீர் வரும் பழைய நீர்வழிப் பாதை கண்டறியப்பட்டுள்ளதால், அதை முழுமையாக சீரமைத்து நிரந்தரமாக நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்தார். கோவில் தரப்பினர் கூறுகையில், கழிவு நீர் வரும் பகுதியை முழுமையாக அடைக்க மேயர் உத்தரவிட்டுள்ளதாகவும், மார்ச் 1 மற்றும் 2ஆம் தேதிகளில் நடைபெற உள்ள திருவிழாவை முன்னிட்டு தற்போது தெப்பக்குளம் தற்காலிகமாக தூர்வா ரப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர். நிரந்த ரமாக நீர் தேக்கி, இதை சுற்றுலா தளமாக மேம்படுத்தினால் பொதுமக்களுக்கு பெரும் பயன் ஏற்படும் என்றும் கூறினர். ஆய்வின்போது அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் செயல் அலு வலர் பிரதீபா, திருக்கோவில் கண்கா ணிப்பாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதிச் செயலாளர் பி. கோபிநாத், பகுதி குழு உறுப்பினர் மோகன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனி ருந்தனர்.</p>
