தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை கூடலழகர் கோவிலில் தேரோட்டம்

31 May 2026, 10:08 pm
மதுரை கூடலழகர் கோவிலில் தேரோட்டம்
<p><strong>மதுரை கூடலழகர் கோவிலில் தேரோட்டம்</strong></p><p>மதுரை, மே 31- மதுரை நகரின் மையப்பகுதி யில் அமைந்துள்ள அருள்மிகு கூட லழகர் பெருமாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பெருந் திருவிழாவின் ஒரு பகுதியாக, திருத்தேரோட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் ஆயி ரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் கூடலழகர் பெருமாள் கோவிலில், வைகாசி பெருந்திருவிழா கடந்த மே 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி யது. இதையடுத்து 14 நாட்கள் நடை பெறும் விழாவில், தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பெரு மாள் சிம்மம், கருடன், அனுமன், சேஷ வாகனம், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, மதுரை டி.எம். கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அருள்மிகு சுந்தரராஜபெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தெற்கு மாரட் வீதி, திருப்பரங் குன்றம் சாலை, நேதாஜி சாலை மற்றும் மேலமாசி வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக வலம் வந்த தேரை, சாலையின் இருபுறங்க ளிலும் திரண்டிருந்த ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்து டன் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி திங்கட் கிழமை அலங்கார திருமஞ்சனம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மறுநாள் சுவாமி குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்கி, ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்றிரவு தசாவதார நிகழ்ச்சி நடைபெற வுள்ளது. பின்னர் கருட வாகனத்தில் புறப்பாடும் நடைபெறும். தேரோட்டத்தை முன்னிட்டு ஏரா ளமான பக்தர்கள் வழிநெடு கிலும் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா சிறப்பாகவும் பாது காப்பாகவும் நடைபெறுவதற்காக 300-க்கும் மேற்பட்ட காவல்துறை யினர் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.