கோச்சடை மெயின் ரோட்டில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
24 May 2026, 11:05 pm

கோச்சடை மெயின் ரோட்டில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீர் சுகாதார சீர்கேட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை, மே 24– மதுரை மாநகராட்சி 67 ஆவது வார்டுக்கு உட்பட்ட கோச்சடை மெயின் ரோடு பகுதியில் கடந்த பல மாதங்களாக பாதாளச் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் சுகாதாரச் சீர்கேடு மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கோச்சடை பகுதி, மாநகராட்சியுடன் இணைந்திருந்தா லும் இன்னும் கிராமப்புற அமைப்பை ஒத்த பகுதியாகவே உள்ளது.

இப்பகுதியில் அமைந்துள்ள கோச்சடை முத்தையா கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவி லாகும்.

தினமும் ஆயிரக்கணக்கான பக் தர்கள் கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

மேலும் திருமணம், காதுகுத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தற்போது முகூர்த்த காலம் என்பதால் மக்கள் வரு கையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கோச்சடை மேலக்கால் மெயின் ரோட்டில் முத்தையா கோவில் எதிரே உள்ள பகுதியில் அடிக்கடி பாதாளச் சாக்கடை கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது.

இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

குறிப்பாக சாந்தி சகன் அடுக்குமாடி குடி யிருப்பு எதிரே தேங்கியுள்ள கழிவுநீர் பல நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அருகிலேயே குப்பைத் தொட்டி இருப்பதால் குப்பைகளும் கழிவுநீருடன் கலந்து கிடக்கின்றன.

இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதி மக்கள் கூறுகையில், “பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

மாநக ராட்சி அதிகாரிகளுக்கும், பகுதி மாமன்ற உறுப்பினருக்கும் தகவல் தெரி வித்துள்ளோம்.

தற்காலிகமாக சுத்தம் செய்வதாக கூறினாலும் நிரந்தர தீர்வு எது வும் இல்லை” என்றனர்.

மேலும், சுப்பையா கோவில் எதிர்புறத்தி லும் இதேபோன்ற நிலை நீடிப்பதாகவும், பேருந்து நிறுத்தம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பேருந்தில் ஏற முடியாமல் மெயின் ரோட்டில் நிற்க வேண் டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த னர்.

இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் மோதி விபத்து ஏற்படும் அபாயமும் நிலவுவதாக கூறப்படு கிறது.

கழிவுநீருடன் குப்பைகளும் கலந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதாக வும், துப்புரவு பணியாளர்கள் குப்பை களை அகற்ற முடியாத நிலை இருப்பதாக வும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

பெரிய வாகனங்கள் வந்தால்தான் குப்பைகளை அகற்ற முடிகிறது என்றும் தெரிவித்தனர்.

எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடி யாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, குப்பைகளை முழுமையாக அகற்றுவது டன், கிருமிநாசினி பொடிகளை தூவி சுகா தாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.