தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்கன் மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்க மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்!

5 Nov 2026, 10:09 pm
மதுரை சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்கன் மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்க மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்!

மதுரை சத்தியமூர்த்தி நகர் காட்டுநாயக்கன் மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்க மலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தல்!

மதுரை, நவ. 5 –மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகரில்வசிக்கும் காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களுக்கு, அரசாணை எண104-ன் படி பெற்றோர்களின் இனச்சான்றிதழைக் கொண்டு பிள்ளை களுக்கும் விரைவாகச் சான்றிதழ் வழங்கிட உரிய வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் எனச் சமூக நீதி மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளரைத் தமிழ்நாடுமலைவாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்துச் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி. டில்லிபாபு, சமூக

நீதித்துறை செயலாளரை நேரில் சந்தித்து அளித்தார்.

நீதிமன்றத் தடைகள் நீங்கியும் சான்றிதழ் மறுப்புமதுரை பரவை பேரூராட்சி சத்தியமூர்த்தி நகரில் சுமார் 70 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் காட்டுநாயக்கன் பழங்குடியின மக்களுக்கு கடந்த 20 ஆண்டுகளில் 2,000-க்கும் மேற்பட்டோருக்கு வருவாய்த்துறையினர் பழங்குடியின (ST) இனச்சான்றி தழ்களை வழங்கியுள்ளனர். ஆனால், கடந்த இரண்டுஆண்டுகளாகத் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக இச்சான்றிதழ்கள்வழங்குவது நிறுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து, கடந்த 2025 டிசம்பர் 9 அன்று சத்தியமூர்த்தி நகர் பகுதியில் தமிழக அரசு நியமித்தமானுடவியலாளர் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொட ரப்பட்ட வழக்குகளும் தள்ளுபடிசெய்யப்பட்டுவிட்டன. எனவே, சான்றிதழ் வழங்குவதில் தற்போது எந்தவிதமான சட்டப்பூர்வ தடையும் இல்லாதநிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி அரசாணை 104-ன் படி உடனடியாகச் சான்றிதழ் வழங்கவேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் பாரபட்சப்போக்கு கண்டனம்மனு அளித்த பின் செய்தியா ளர்களிடம் பேசிய டில்லிபாபு, பிற மாவட்டங்களில் கோட்டாட்சியர்கள் பழங்குடியினசான்றிதழ் வழங்கி வரும் நிலையில், மதுரை கோட்டாட்சியர் மட்டும் தொடர்ந்து மறுத்து வருவதற்கான உண்மையான காரணம் என்னவென்று கேள்வி எழுப்பினார். பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் தீர்வு கிடைக்காததால், சம்பந்தப்பட்டஅதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.இந்நிகழ்வின்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மேற்கு ஒன்றியச் செயலாளர் ம. தனபாலன், மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர் முருகன் மற்றும் கிராம முக்கி யஸ்தர்கள் உடனிருந்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.