தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் எதிர்ப்பு போராட்டம் காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க நிர்வாகிகள் கைது

22 Jul 2026, 9:34 pm
நீட் எதிர்ப்பு போராட்டம் காமராசர் பல்கலைக்கழகத்தில்  மாணவர் சங்க நிர்வாகிகள் கைது

நீட் எதிர்ப்பு போராட்டம் காமராசர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்க நிர்வாகிகள் கைது

ஜனநாயக அமைப்புகள் கண்டனம்

மதுரை, ஜூலை 22- நீட் தேர்வுக்கு எதிராக நடை பெற்ற போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, மதுரை காமராசர் பல்கலைக் கழக வளாகத்தில் வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர் அமைப்பு நிர் வாகிகளை காவல்துறையினர் கைது செய்ததாக ஜனநாயக அமைப்புகள் குற்றம்சாட்டி கண்டனம் தெரிவித்துள்ளன. தில்லியில் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆத ரவாக, செவ்வாய்க்கிழமை இரவு மதுரையில் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் தமுக்கம் தமிழன்னை சிலை அருகே காத்திருப்பு போராட் டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 50-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து, நள்ளிர வுக்குப் பிறகு விடுவித்தனர். இதனைத் தொடர்ந்து, புதன் கிழமை காலை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் இந் திய மாணவர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் டீலன் ஜஸ்டின், மாவட்டச் செயலாளர் டேவிட் ராஜதுரை மற் றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி ரவி ஆகி யோரை, அவர்கள் வகுப்பறையில் இருந்தபோதே காவல்துறை யினர் கைது செய்து நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத் துக்கு அழைத்துச் சென்றதாக கூறப் படுகிறது. நீட் எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்கக் கூடாது என்ற நோக் கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக இந்த கைது மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ஜனநாயக அமைப்பு கள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், பல்கலைக்கழக வகுப்பறைக்குள் காவல்துறை யினர் நுழைந்து மாணவர் அமைப் பினரை கைது செய்தது கல்வி வளா கங்களின் சுதந்திரத்திற்கும், மாண வர்களின் ஜனநாயக உரிமைகளுக் கும் எதிரான நடவடிக்கை என்றும், கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி என்றும் அவை தெரிவித் துள்ளன. கைது செய்யப்பட்ட மாணவர் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். மாணவர் இயக்கங்கள் மீது முன் னெச்சரிக்கை கைது உள்ளிட்ட அடக்குமுறை நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஜன நாயக அமைப்புகள் வலியுறுத்தி யுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.