கச்சிராயன்பட்டி ஆடுதுறை கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் டங்ஸ்டன் கூட்டமைப்பு மனு
13 Jul 2026, 10:17 pm
<p><strong>கச்சிராயன்பட்டி ஆடுதுறை கல்குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் டங்ஸ்டன் கூட்டமைப்பு மனு</strong></p><p>மதுரை, ஜூலை 13- மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கச்சி ராயன்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் வி. ஆடுதுறை கல்குவாரியை நிரந்தரமாக மூடுவதுடன், தொல்லியல் மற்றும் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரு விமலை சுற்றுவட்டாரத்தில் இனி எந்தவித மான கல்குவாரிக்கும் அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி, டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு, இயற்கை வள பாதுகாப்புக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார் பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்க ளன்று மனு அளிக்கப்பட்டது. மனுவில், மேலூர் வட்டம் கச்சிராயன் பட்டி கிராமம், புல எண் 697/2-ல் அமைந் துள்ள வி.ஆடுதுறை கல்குவாரி பல்வேறு சட்டவிதிமுறைகளை மீறி செயல்பட்டு வரு வதாகவும், எனவே அதன் அனுமதியை நிரந்த ரமாக ரத்து செய்து, கல்குவாரி செயல்பாடு களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. மேலும், சிறு கனிம சலுகை விதிகள், 1959-ன் பிரிவு 36(1)-ன்படி, கல்குவாரியைச் சுற்றியுள்ள 300 மீட்டர் சுற்றளவில் அங்கீ கரிக்கப்பட்ட குடியிருப்புகள் இருக்கக் கூடாது. ஆனால் புல எண்கள் 702, 668, 663, 666 மற்றும் 677 ஆகிய பகுதிகளில் குடியிருப்பு கள் உள்ளதாகவும், இது விதிமீறல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் 2021 நவம்பர் 3 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தொல்லியல் சின்னங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் கல்குவாரிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஆனால் அரு விமலை தொல்லியல் சின்னம் மற்றும் அருவிமலை சிவன் கோவில் ஆகியவை இந்த கல்குவாரிக்கு 500 மீட்டர் சுற்றள விற்குள் அமைந்துள்ளதாக மனுவில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதேபோல், புல எண் 698-ல் உள்ள ஊருணி மற்றும் புல எண்கள் 680, 662-ல் உள்ள உப்பாறு ஆற்றிலிருந்து சட்டப்படி கடைப்பிடிக்க வேண்டிய 50 மீட்டர் பாது காப்பு இடைவெளி பின்பற்றப்படவில்லை என்றும், பொதுச் சாலையிலிருந்தும் 50 மீட்டர் இடைவெளி விடப்படவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அனுமதி வழங்கப்பட்ட எல்லைக்கு வெளியே சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண் டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட் டுள்ளது. மேலும், கல்குவாரி செயல்பாடுகளால் அரிய வகை உயிரினங்களின் வாழ்விடம் பாதிக்கப்படுவதாகவும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்களால் சாலை கள் சேதமடைவதோடு குடிநீர் குழாய்களும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது. எனவே, வி.ஆடுதுறை கல்குவாரியின் அனுமதியை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், கல்குவாரி செயல்பாடுகளை உட னடியாக நிறுத்தி சட்டவிதிமீறல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண் டும், அனுமதி பெறும்போது தவறான தக வல்கள் அளிக்கப்பட்டிருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த அருவிமலை சுற்றுவட்டா ரத்தில் இனி எந்தவிதமான கல்குவாரிக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.</p>
