தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை முதலீட்டாளர் மாநாடு: ரூ.36,660 கோடி முதலீடு புதிய நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த இடம் மதுரை

7 Dec 2025, 3:52 pm
மதுரை முதலீட்டாளர் மாநாடு: ரூ.36,660 கோடி முதலீடு  புதிய நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த இடம் மதுரை
<p><strong>மதுரை முதலீட்டாளர் மாநாடு: ரூ.36,660 கோடி முதலீடு&nbsp; புதிய நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த இடம் மதுரை</strong></p> <p>மதுரை, டிச. 7- மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் &lsquo;தமிழ்நாடு வளர்கிறது&rsquo; என்ற &nbsp;தலைப்பில் ஞாயிறன்று நடைபெற்ற முதலீட்டா ளர்கள் மாநாட்டில், ரூ.36,660.35 கோடி மதிப் பிலான 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகின. இதன் மூலம் 56,766 இளைஞர் களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில் துறையில் ரூ.35,560.15 கோடி முதலீட்டில் 46 ஒப்பந்தங்கள் மூலம் 52,060 பேருக்கும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையில் ரூ.1,100.20 கோடி முத லீட்டில் 45 ஒப்பந்தங்கள் மூலம் 4,706 பேருக் கும் வேலைவாய்ப்பு உருவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலூர் சிப்காட்டுக்கு அடிக்கல் விரகனூர் சுற்றுச்சாலை அருகே வேலம் மாள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஐடா &nbsp;ஸ்கட்டர் அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட் டில், மதுரை மாவட்டம் மேலூரில் 278.26 ஏக்கர் &nbsp;பரப்பளவில் உலகத்தரம் வாய்ந்த அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள சிப்காட் தொழிற்பூங்காவுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், &ldquo;சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை இன்று முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் புதிய வளர்ச்சி பாதையில் அடியெடுத்து வைக்கிறது. வரலாற்றுச் சுவடுகளுடன் விளங்கும் மதுரையை தமிழகத்தின் &lsquo;Gateway to the South&rsquo; ஆகவும், தூய்மையான நவீன தொழில் நகரமாகவும் உருவாக்க அரசு பல முனைப்பான முயற்சிகளை மேற்கொண்டு வரு கிறது&rdquo; என்றார். மாட்டுத்தாவணியில் அடுத்த ஆண்டு இறுதி யில் திறக்கப்படவுள்ள நியோ டைடல் பார்க் திட்டத்தையும் குறிப்பிட்ட முதலமைச்சர், இதன் &nbsp;மூலம் மதுரையில் ஐடி துறையில் மட்டும் ஏறத்தாழ 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு உரு வாகியுள்ளதாகவும், வருங்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். &nbsp;மதுரையின் சிறப்பு &ldquo;சென்னை, கோவை போன்ற நகரங்களில் நிலத்தட்டுப்பாடு, அதிக வாழ்க்கைச் செலவு போன்ற சவால்கள் உள்ள நிலையில், மதுரை அனைத்து வகையான உள்கட்டமைப்பு வசதி களையும் பெற்றுள்ளது. துறைமுகம், ரயில், &nbsp;நான்கு வழிச்சாலைகள், விரிவாக்கம் பெறும் &nbsp;விமான நிலையம் என தொழில் வளர்ச்சிக்கான சூழல் சிறப்பாக உள்ளது. வாழ்க்கைச் செலவும் &nbsp;குறைவாக இருப்பதால், புதிய நிறுவ னங்களுக்கு மதுரை மிகச் சிறந்த இடமாக &nbsp;திகழ்கிறது&rdquo; என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டி னார். மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறைவால் ஏற்பட்ட சமூக சிக்கல்களை சரிசெய்ய தொழில் வளர்ச்சியே முக்கிய தீர்வாகும் என்று வலியுறுத்திய முதலமைச்சர், இந்த முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி, அதன் மூலம் சிறந்த மூளைகள் (இளைஞர்கள்) வெளிநாடுகளுக்குப் பறந்து &nbsp;விடுவதைத் தடுக்கும் வகையில் அமைந்து உள்ளது என்றார். &lsquo;மதுரை 2044&rsquo; என்ற நீண்டகாலத் திட்டத்தின் &nbsp;கீழ், தொழில், குடியிருப்பு, போக்குவரத்து, சுற்றுலா, பாரம்பரியம் பாதுகாப்பு ஆகிய &nbsp;அனைத்தையும் ஒருங்கிணைத்து மீள்கட்ட மைப்பு செய்யப்படவுள்ளதாகவும் முதல மைச்சர் அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு (நிதி), பி.மூர்த்தி (வணிகவரி), பழனிவேல் தியாகராஜன் (தகவல் தொழில் நுட்பவியல்) மற்றும் சு.வெங்கடேசன் எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.